பல லட்சம் பேருக்கு இரவே போன மெசேஜ்.. இன்ஃபோசிஸ் எடுத்த மேஜர் முடிவு.. அசத்தலான திட்டம்
சென்னை: இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடக்க லெவல் ஊழியர்களுக்கான சம்பளத்தை நீண்ட காலத்திற்கு உயர்த்தி உள்ளது.
தொடக்க லெவல் பணிகளால் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 போன்ற சிறப்புப் பணிகளுக்கான புதிய பணியாளர்களின் சம்பளத்தை ஆண்டுக்கு ₹21 லட்சம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆரம்பநிலை பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம் இதுவாகும்.

இன்ஃபோசிஸ் சம்பளம்
செயற்கை நுண்ணறிவுக்கு (AI) முன்னுரிமை அளிக்கும் தனது உத்திகளை வலுப்படுத்த 20,000 புதிய பணியாளர்களை நியமிக்க இன்ஃபோசிஸ் இலக்கு வைத்துள்ளது. இதற்காக 2025ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கான வளாகம் சாராத வேலைவாய்ப்பு இயக்கத்தையும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளத்துய.
இந்த வேலைவாய்ப்புகள் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் (L1 முதல் L3 வரை) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (பயிற்சி) நிலைகளில் உள்ளன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் (IT), ECE, EEE போன்ற பிரிவுகளில் BE, BTech, ME, MTech, MCA மற்றும் ஒருங்கிணைந்த MSc பட்டதாரிகள் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளான ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L2 (ஆண்டுக்கு ₹16 லட்சம்), L1 (ஆண்டுக்கு ₹11 லட்சம்) மற்றும் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (ஆண்டுக்கு ₹7 லட்சம்) ஆகியவற்றுக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடக்க லெவல் ஊழியர்களுக்கான சம்பளத்தை நீண்ட காலத்திற்கு உயர்த்தி உள்ளது.
இன்ஃபோசிஸ் குழுமத்தின் முடிவு
இன்ஃபோசிஸ் குழுமத்தின் வட்டாரங்கள் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உத்திகளால் திறமையானோரின் தேவை அதிகரித்துள்ளதாகவும், எங்கள் ஆரம்பகால பணியமர்த்தல் வளாக நேர்காணல்கள் மற்றும் வளாகம் சாராத வழிகள் இரண்டையும் உள்ளடக்கியது. ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் பிரிவில் ஊதியத்தை ஆண்டுக்கு ₹21 லட்சம் வரை உயர்த்தி வாய்ப்புகளையும் விரிவுபடுத்தியுள்ளோம், என்றும் கூறி உள்ளனர்.
ஐடி நிறுவனங்களில் புதிய பணியாளர்களின் சம்பளத்திற்கும், உயர் பதவியில் உள்ளோரின் சம்பளத்திற்கும் இடையிலான பெரும் இடைவெளி நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நிதி ஆண்டு 2026ன் முதல் பாதியில் இன்ஃபோசிஸ் 12,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான 20,000 பேர் என்ற மொத்த இலக்கை நிறுவனம் அடையும் பாதையில் உள்ளது.
பங்குகளை திரும்ப பெறும் நிறுவனம்
இன்னொரு பக்கம் ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட், நவம்பர் 20, 2025 அன்று, தனது பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான விண்டோவை திறப்பதாக அறிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பங்கு திரும்பப் பெறுதல் திட்டத்தின் கீழ், இன்ஃபோசிஸ் தலா ₹5 முகமதிப்புள்ள 10 கோடி முழுமையாகச் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளை, ஒரு பங்குக்கு ₹1,800 வீதம், மொத்தம் ₹18,000 கோடிக்கு வாங்கவுள்ளது. இது நிறுவனத்தின் தனித்த ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 2.41% ஆகும். இந்த விண்டோ நவம்பர் 26 அன்று மூடப்படும்.
நவம்பர் 14 அன்று நிர்ணயிக்கப்பட்ட தகுதிப் பதிவு தேதிப்படி, சிறிய பங்குதாரர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 11 பங்குகளுக்கும் 2 ஈக்விட்டி பங்குகளை வழங்கலாம். பொதுப்பிரிவு பங்குதாரர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 706 பங்குகளுக்கும் 17 ஈக்விட்டி பங்குகளை வழங்க உரிமை பெறுவார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications