Ilakkiya: என் சாவுக்கு காரணம் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் தான்! இலக்கியா பகீர் குற்றச்சாட்டு
சென்னை: டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, "என் சாவுக்கு ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்தான் காரணம்" என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு, அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் தன்னுடன் 6 ஆண்டுகளாகப் பழகிவிட்டு ஏமாற்றிவிட்டதாக இலக்கியா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டராகிய சூப்பர் சுப்பராயனின் மகன்தான் திலீப் சுப்பராயன். தற்போது இவரும் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். 'சுந்தரபாண்டியன்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ஜில்லா', 'புலி', 'தெறி', 'வாரிசு', 'கோட்', 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'காப்பான்', 'தீரன்', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவர் தனது கவர்ச்சிகரமான உடைகளுடன் ஆடும் குத்தாட்ட வீடியோக்களுக்காகப் பிரபலமானவர். இதற்காகவே இவருக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த புகழ் காரணமாக இலக்கியாவுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அந்தப் படம் எந்தக் காரணத்தினாலோ வெளியாகவில்லை. இவர் தற்போது யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இத்தகைய சூழலில்தான், சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன் மீது இலக்கியா பரபரப்பான புகார்களைக் கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டிருக்கையில், "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். 6 ஆண்டுகளாக அவன் கூட நான் இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்ககூட பழக்கம். அதைத் தட்டிக் கேட்ட என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால் முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடிஅடினு அடிப்பான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஸ்டோரியில் திலீப்பின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இலக்கியா, போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இலக்கியா மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications