சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமலானது-- கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை
சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய லாக்டவுனில் கட்டுப்பாடுகளை மீறினால் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம். கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் 2,000- த்தை தாண்டி வருகிறது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா மிக உக்கிரமாக தாக்கி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் 4 மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

அமலுக்கு வந்த லாக்க்டவ்வுன்
இதனால் இம்மாவட்டங்களில் கொரோனா பரவுவதைத் தடுக்க இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

முழு அளவில் லாக்டவ்வுன்
கடந்த கால லாக்டவுன்களைப் போல கட்டுப்பாடுகள் இம்முறை தளர்த்தப்படப் போவது இல்லை என அரசு அறிவித்திருக்கிறது. இந்த 4 மாவட்டங்களிலும் அனைத்துவித கட்டுப்பாடுகளும் முழு அளவில் கடைபிடிக்கப்படும் என வழிகாட்டுதல்களையும் அரசு ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் பயணம்
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 4 மாவட்டங்களிலும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையைவிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு வியாழக்கிழமை இரவே திரும்பிவிட்டனர். இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் இவர்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கில் யணம் மேற்கொண்டதால் புறநகர்களில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

பிரதான சாலைகள் மூடல்
சென்னையில் அண்ணா சாலை உட்பட அனைத்து முதன்மையான சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 கி.மீ சுற்றளவுக்குள்தான் நடமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications