Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அரசுக்கு சிக்கல்? "காலவரையற்ற" உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊதிய முரனைக் களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று முதல் அவர்கள் தமிழகம் முழுக்க காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக, இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இப்போது ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

Intermediate teachers to start indefinite hunger strike across Tamil Nadu demanding same work same wages

தேர்தல் காலத்தில் அளித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 10 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிக்கை: இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "2009-இல் திமுக ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய முரண்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதனை களையக் கோரி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கடுமையான போராட்டங்களை எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக போராட்டம் நடத்தி வருகிறோம்.

2018-இல் நாங்கள் DPI வளாகத்தில் கடுமையான காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், எங்களது கரம் பற்றி, திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக 2009-க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். அதன்படியே, திமுக தேர்தல் அறிக்கை 311-இல் இடம்பெற்றது.

ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையைக் கூட நிறைவேறவில்லை. இப்போதும் தமிழக முதலமைச்சர், ஒவ்வொரு கூட்டங்களிலும், 'நாங்கள் சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம்' என்று கூறி வருகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளாகச் சொன்னதைச் செய்யவில்லை.

காலவரையற்ற உண்ணாவிரதம்: 2023 ஜனவரி 1-இல் இந்த ஊதியக் குழு அமைக்கும் போதே, மூன்றே மாதங்களில் உங்களுடைய ஊதிய முரண்பாடுகளை இந்த குழு பரிசீலித்து அறிக்கை அளிக்கும் என்றார்கள். 9 மாதங்கள் ஆகியும் எந்தவிதமான அறிக்கையும் வழங்காமல், அதற்கான முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால்தான், மீண்டும் 2023 செப்டம்பர் கடைசியில் நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கண்டிப்பாக இன்னும் மூன்றே மாதத்தில் குழுவின் அறிக்கையைப் பெற்று, ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். தற்போதுவரை குழு எவ்வித முன்னேற்றமும் இன்றி, அதே நிலையிலேயே தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மூன்று மாதம், மூன்று மாதம் என்று இன்னும் எத்தனை மூன்று மாதங்களாகப் பேசப் போகிறார் எனத் தெரியவில்லை. 5 மாதங்கள் கடந்தும், இப்போதும் எதுவும் நடைபெறவில்லை.

இது போன்ற சூழ்நிலையில்தான், பணி நாட்களில் நாங்கள் அறவழியிலான அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இப்போது மீண்டும் எங்களது பிரச்சினைக்குத் தீர்வு சொல்லாமல், போராட்டத்தைக் கைவிடுங்கள் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

குற்றவாளிகள் போல: ஆசிரியர்கள் மீது பாசத்துடன் இருக்கும் எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சொன்னதை நிறைவேற்றக் கோரி பத்து நாட்களாகப் போராடி வரும் ஆசிரியர்களை அழைத்துப் பேசக்கூட மனமில்லாமல், காவல் துறையினரைக் கொண்டு ஏதோ குற்றவாளிகளைப் போலக் கைது செய்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வருவது வேதனையளிக்கிறது.

உலகிற்கே சமூக நீதியை எடுத்துரைக்கும் தமிழக முதலமைச்சர், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் சமூக நீதி வழங்க மறுத்து, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இருப்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமான ஆசிரியர்கள், சமூக நீதி இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்பதே முற்றிலும் உண்மை.

உண்ணாவிரதம்: விரைவில் தமிழக முதலமைச்சர், 'சமநிலைக்குச் சம ஊதியம்' என இடைநிலை ஆசிரியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்ற ஒரு நல்ல அறிவிப்பை அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காத்துக் கொண்டு இருக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+