இருக்க பிரச்சனைல இது வேற.. தவெகவில் தலைதூக்கும் கோஷ்டி அரசியல்! விஜய்க்கு புது தலைவலி..பரபர பனையூர்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு கரூர் சம்பவத்திற்கு பின் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் கட்சிக்கு தற்போது முட்டுக்கட்டை போடும் வகையில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் மாவட்டச் செயலாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாகவும், கட்சிக்குள் ஒரு மௌன போராட்டமே நடந்து வருகிறது என்கின்றனர்.
ஒரு புதிய அரசியல் கட்சி உருவான பிறகு அதற்குள் பல்வேறு கோஷ்டிகள் உருவாகுவது அரசியலில் பொதுவான விஷயமே. ஆனால் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இந்த கோஷ்டி அரசியல் மிக வேகமாக அதிகமாகி வருவது விஜய்க்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.
விஜய் மக்கள் இயக்கத்தை நீண்ட காலமாக இயக்கி வந்த புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் காட்டிய நம்பிக்கையே அவரை கட்சியின் பொதுச்செயலாளராக உயர்த்தியது. ஆரம்பத்தில், ஆனந்த் ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

விஜய்
மாவட்டச் செயலாளர்கள் முதல் முக்கிய பொறுப்பாளர்கள் வரை எல்லோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். விஜயையும் தொண்டர்களையும் பிரிக்கிற தடுப்பு சுவராகவே ஆனந்த் செயல்படுகிறார் என்ற குறை சொல்லும் கட்சிக்குள் அதிகரித்தது. பதவிகள் பணம் வாங்கி கொடுக்கப்பட்டன என்ற குற்றசாட்டுகளும் இதே காலத்தில் பல இடங்களில் எழுந்தன. இந்த நிலையில்தான் அரசியலில் அனுபவமுள்ள ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் போன்றோர் வேறு கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்தனர்.
தவெக நெருக்கடி
இவர்களுக்கு விஜய் நேரடியாக மாநிலப் பொறுப்புகள் வழங்கினார். இதனால் கட்சிக்குள் அதிகார சமநிலை தாறுமாறானது. புதிய தலைமுறையினர் வருகையால் ஆனந்தின் தலையீடு குறையத் தொடங்கியது. ஆதவ் அர்ஜுனா வருகையின் போது கட்சிக்குள் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். நிர்மல்குமார் பொதுவெளியில் தவெகவின் முக்கிய பேச்சாளராக உயர்ந்தார். இவ்விருவருக்கும் ஊடகங்கள் வழியாகப் பெயரும் செல்வாக்கும் அதிகரிக்க ஆரம்பித்தது. இது இயல்பாகவே ஆனந்துக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது.
உட்கட்சி மோதல்
அவர்களுக்குள் கருத்து மோதல்கள் அடிக்கடி உருவாகி வந்தன. இதற்கிடையில் கட்சிக்கான வியூகங்களை அமைக்க ஜான் ஆரோக்கியசாமி வந்ததும் நிலைமை இன்னும் சிக்கலானது. ஆனந்தை குறித்த சர்ச்சையான ஆடியோ வெளியானதும் கட்சிக்குள் "ஆனந்த் எதிர்ப்பு" வலுப்பெற்றது. விஜயைத் தவிர, பலரும் ஆனந்தை விரும்பாத சூழல் உருவானது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் கட்சிப் பொறுப்புகளை ஒருவரிடம் மட்டுமே வைக்காமல் பலருக்கு பிரித்தளித்தது புதிய மோதலுக்கான காரணமானது.
கோஷ்டி அரசியல்
இந்த மாற்றமே ஆனந்தின் அதிகாரத்தை குறைக்கும் முதல் படியாக பார்க்கப்படுகிறது. இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட ஆதவ், நிர்மல், ஜான் ஆகியோர் தங்கள் கோஷ்டிகளை உருவாக்க முயற்சி செய்கின்றனர். தவெக நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து கூறும் போது,"முன்பு கட்சிக்குள் எல்லாவற்றையும் ஆனந்த் தான் பார்த்தார். இப்போது பொறுப்புகள் பலருக்கு பிரிக்கப்பட்டதால், யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்ற போட்டி துவங்கிவிட்டது. மாவட்டச் செயலாளர்களை தங்கள் பக்கம் திருப்ப ஆதவ், நிர்மல் இடையே மெளன போராட்டாமே நடக்கிறது. மொத்தத்தில், தவெக இப்போது யாரின் கட்டுப்பாட்டுக்குள் என்ற உள்கட்சி மோதலில் சிக்கிக் கொண்டுள்ளது" என்கின்றனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications