தவெகவில் ஆரம்பித்த பஞ்சாயத்து.. ’முட்டை’ மாவட்டத்தில் தனித்தவில் வாசிக்கும் புள்ளி! கடுப்பான புஸ்ஸி!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக சந்திக்க இருக்கிறது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம். இந்த நிலையில் கட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தற்போது தங்கள் தொகுதிகளுக்கு துண்டு போட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் என்கின்றனர் நாமக்கல்லை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தினர்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
திமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு, கூட்டணி பங்கீடு அளித்தவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டாலும், இன்னும் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எட்ட படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
நாம் தமிழர் கட்சியை பற்றி சொல்லவே தேவையில்லை தனித்துப் போட்டி என முடிவு செய்துவிட்ட சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தே விட்டார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிக்கு பாதி அதாவது 117 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் வேகம் எடுக்காமல் இருப்பது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பணிகள் தான். இன்னும் முதற்கட்ட பிரச்சாரத்தையே முடிக்காமல் இருக்கிறார் விஜய். மேலும் ஒன்றிய நகர் மாநகர் பகுதி நிர்வாகிகளை நியமனமும் நடைபெறாமல் இருக்கிறது.
விஜய் கட்சி
ஆனால் அதற்குள்ளே கட்சிக்குள் கோஷ்டி மோதல்கள் எழுந்து விட்டதாக புலம்புகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தவெகவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக வந்திருக்கும் புள்ளிகள் தங்கள் பங்குக்கு பாலிடிக்ஸ் செய்வதால், ஏற்கனவே இருந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனது சொந்த ஊர் இருக்கும் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் என்கின்றனர்.
புஸ்ஸி ஆனந்த்
இந்நிலையில், தலைமையின் அனுமதியின்றி தானாகவே இது போன்று கிளப்பி விட்டு வருவதாக புஸ்ஸிஆனந்த் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆன அருண்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சார்ந்தவர். கட்சியில் சேர்ந்ததில் இருந்து தொடர்ந்து அந்த தொகுதியில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இடையில் நாமக்கல்லில் இரண்டு மூன்று ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி இருக்கிறார். இதற்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் அருண்ராஜ் தான் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கிளப்பி விட்டு வருகின்றனர்.
அருண்ராஜ்
மேலும் ஒரு சிலர் கட்சிக்குள்ளும் இது தொடர்பாக பேசியதால் ஆத்திரம் அடைந்த புஸ்ஸி ஆனந்த் தலைமையின் அனுமதியின்றி யாரும் வேட்பாளர் என சொல்லக் கூடாது.. தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் யார் என்பதை தலைவர்தான் அறிவிப்பார் என அதிரடியாக அறிக்கை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் மறைமுகமாக தேர்தல் வேலைகளை பார்த்து வருகிறார் அருண்ராஜ் என்கின்றனர்.
தவெக உட்கட்சி மோதல்
இதற்கிடையே ஒரு சர்ச்சையில் சிக்கிய நாமக்கல் தமிழக வெற்றிக் கழக புள்ளி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தற்போது வரை அவரது பதவியை நிரப்ப யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வேறு யாராவது வந்தால் தனக்கு எதிராக திரும்பி விடுவார்களோ என அச்சப்பட்ட அருண்ராஜ், புதிய நியமத்தையும் தள்ளிப் போட்டு வருவதாகவும், தேர்தல் வரை நாமக்கல்லின் பொறுப்பாளராக தானே செயல்பட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications