சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Nurses Day 2021: கொரோனா போர்க்களத்தில் போராடும் வெள்ளை உடை வீராங்கனைகளுக்கு தலைவர்கள் வாழ்த்து

கொரோனா பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெர

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்தோடு ஈடுபடுபவர்கள் செவிலியர்கள். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருபால் செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் செவிலியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்தோடு ஈடுபடுபவர்கள் செவிலியர்கள் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி+முழு ஊரடங்கு.. சாதித்து காட்டிய போரிஸ் ஜான்சன்இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி+முழு ஊரடங்கு.. சாதித்து காட்டிய போரிஸ் ஜான்சன்

போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்து தாய் மனதிற்குரிய பரிவு காட்டிய கைவிளக்கேந்திய காரிகை 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' எனும் செவிலியரைச் சிறப்பிக்கும் விதமாக செவிலியர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

கொரோனா பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளித்த தமிழக முதல்வர் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

தன்னலமற்றவர்கள்

தன்னலமற்றவர்கள்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டு இரவு பகல் பாராது தன்னை வருத்தி பிறரை காக்கும் தன்னலமற்ற செவிலியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், உலக செவிலியர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், குடும்பங்களை மறந்து, தியாகங்களை சுமந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனா எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! #nursesday2021 என்று தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான சூழல்

நெருக்கடியான சூழல்

மருத்துவத்துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகள்.
கொரோனா பேரிடர் போன்ற நெருக்கடியான சூழலிலும் தங்களின் துன்பங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர்கள் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்.

நீண்ட கால கோரிக்கை

நீண்ட கால கோரிக்கை

அபாயகரமான சூழலில் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்ற உழைக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உட்பட மருத்துவ துறையில் இயங்கும் முன்களப்பணியாளர்கள் திடீரென உயிரிழக்கும் போது அவர்களது குடும்பம் நிர்க்கதியாவதைத் தடுப்பதற்கு 'கார்ப்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மத்திய அரசு வழங்குவதற்கு இணையான ஊதியத்தை தமிழக அரசும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

English summary
May 12 is the birth anniversary of Florence Nightingale, the founder of modern nursing.International Nurses Day is a day observed every year on May 12 to honour nurses. Chief Minister of Tamil Nadu M.K. Stalin also congratulated nurses on both sides. Opposition leader Edappadi PalaniSamy, PAMAC founder Dr. Ramadoss and AMMK leader TTV Dinakaran also congratulated the nurses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X