இன்று மகளிர் தினம்.. தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்.. சென்னையில் ஔவையார் சிலைக்கு அரசு மலர் மரியாதை
சென்னை: இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: "சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்" என்று தன்னுடைய சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.. அதேபோல, திராவிட மாடல் அரசின் பெண்களுக்கான உரிமை பயணம் தொடரும் என்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அதேபோல, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், "அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.. பாரதி கண்ட புதுமைப் பெண்களின் வடிவமாக ஜெயலலிதா திகழ்ந்ததையும், அவர்களைப் போல பல்வேறு பொதுத்தளங்களில் இயங்கும் பெண்களையும் காணுகின்றபோது மனம் பேர் உவகை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு: இன்று தமிழக அரசு சார்பிலும் பெண்கள் தினம் சிறப்பிக்கப்படுகிறது.. அந்தவகையில், சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.
மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான இன்று வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப்பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications