International Yoga day: தினசரி யோகா.. தீராத ஆரோக்கியம்.. செம்மையான வாழ்க்கை!
சென்னை: யோகாசனம்.. நமது வாழ்க்கையின் அன்றாடமாக இதை கைக் கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்திற்குக் குறைவிருக்காது. சக்திக்குக் குறைவிருக்காது.. மன அமைதிக்கும் பஞ்சமே இருக்காது.
உலகுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரியத்தில் ஒன்றுதான் இந்த யோகாசனம். அருமையான உடற்பயிற்சி மட்டுமல்ல.. மனதுக்கு வலிமையையும், அமைதியையும், சாந்தத்தையும் தரும் அற்புதக் கலையும் கூட.

தினசரி எதைச் செய்கிறோமோ இல்லையோ நிச்சயம் யோகாசனம் செய்ய வேண்டும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் யோகாசனம் நமக்கு வெகுவாக கை கொடுக்கும்.. ஆமாங்க, மூச்சுப் பயிற்சிக்கு யோகாவை விட சிறந்த கலை என்ன உள்ளது, சொல்லுங்கள்.
சர்வதேச யோகாசன தினத்தை இன்று நமது நாடு மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளிலும் கூட கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த சிறுமி தாரணி ரவிக்குமார் அருமையான யோகாசனக் கலைஞராக உருவெடுத்து வருகிறார். எதிர்காலத்திலத் மிகப் பெரிய யோகாசன ஆசிரியராக வர வேண்டும் என்பதே இவரது கனவு.
7வது படித்து வரும் தாரணி செய்துள்ள யோகாசன வீடியோ நம்மை வெகுவாகக் கவர்ந்தது. பல்வேறு சின்னச் சின்ன ஆசனங்களை இவர் செய்து காட்டுகிறார். நீங்களும் பாருங்கள்.. உரிய ஆலோசனையுடன் இதை நீங்களும் கூட செய்து பார்க்கலாம். சின்ன சின்ன யோகாசனங்களை செய்து பார்த்த பின்னர் மற்ற ஆசனங்களையும் கூட செய்யலாம்.
உடலுக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.. யோகா செய்வோம்.. ஆரோக்கியமாக வாழ்வோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications