அரசு பஸ்சில் சில்லறை வாங்காமல் இறங்கிட்டீங்களா.. கவலையை விடுங்க! இனி அக்கவுண்டிற்கே பணம் வந்துடுமாம்
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுத்து விட்டு மீதி சில்லறை பணத்தினை வாங்க மறந்து சென்றால் பணத்தை பெறுவதற்கான வசதியை அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி பணம் எப்படி பெறுவது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
தமிழகத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது தமிழக அரசு பேருந்துகள்தான். சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இயக்கப்படும் ஆயிக்கணக்கான பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

பஸ்களில் பயணம் என்றாலே பல பயணிகளுக்கும் பெரும் சிக்கலாக இருப்பது சில்லறை பிரச்சினைதான். அடிக்கடி பஸ்களில் சில்லறை பிரச்சினை பயணிகளுக்கு பெரும் தலைவலியாகவே மாறிவிடும். சில நேரங்களில் டிக்கெட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை பயணிகளிடம் நடத்துனர்கள் கொடுக்காமலே பிற பயணிகளுக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அத்தகைய நேரங்களில் பயணிகள் மீதி சில்லறையை வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார்க்ள். பல நேரங்களில் நடத்துனர்கள் சரியான தொகையை கொண்டு வர மாட்டீர்களா.. என பயணிகளிடம் முறைக்கும் சம்பவமும் நடைபெறும். இப்படி பேருந்தில் சில்லறை பிரச்சினை என்பது பயணிகளின் நிம்மதியை பயணம் முழுக்க கூட சில நேரம் கெடுத்து விடும். தற்போது தொலை தூர பஸ்களில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
நடத்துனர்களிடம் இருக்கும் கருவி மூலமாக கூகுள் பே வழியாக டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தி விட முடியும். தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப பயணிகளின் சிரமத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை செய்து வருகிறது. அந்த வகையில், தான் தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
இதன்படி அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டால் யுபியை மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தின் இலவச தொலைபேசி அழைப்பு எண்ணான 1800 599 1500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயண சீட்டு (டிக்கெட்) விவரங்களை தெரிவித்து சில்லறைகளை யுபிஐ மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் செல்லும் போது டிக்கெட் எடுத்தது போக மீதி சில்லறை தொகையை கடைசியில் தருகிறேன் என கண்டக்டர்கள் சொல்வதை பார்த்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் சில பயணிகள் மீதி தொகையை வாங்க மறந்து பயணிகள் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழலில், அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த புதிய வசதி பெரிதும் பயனுள்ளதாக அமையும். அதே நேரத்தில், எவ்வளவு சில்லறை தொகை தர வேண்டும் என்பது நடத்துனருக்கும் பயணிக்கும் மட்டுமே தெரியும்.
சில நேரங்களில் நடத்துனர்கள் டிக்கெட்டில் எழுதி கொடுப்பார்கள். சில நடத்துனர்கள் எழுதி கொடுப்பதும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், மீதி பணத்தை பெறுவதில் பல நடைமுறைகள் சிக்கல்கள் எழக்கூடும் என்று இது குறித்த தெளிவான விவரங்களை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
-
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications