பங்கு சந்தை மோசடி! சொந்தக்கார பெண்ணிடமே கைவரிசை! மணக்கோலத்திலேயே சென்னை மாப்பிள்ளைக்கு தர்மஅடி
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பங்குச் சந்தை முதலீட்டில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக சொல்லப்படும் இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த முதலீட்டாளர்கள், மாப்பிள்ளையை திருமண மண்டபத்திற்கே போய் வெளுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாவரத்தை சேர்ந்தவர் கிளிண்டன். இவர் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான வகுப்பு எடுப்பதாக கூறியிருந்தார். தனது உறவினர்கள், நண்பர்களிடம், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினாராம்.

இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததாக தெரிகிறது. அந்த வகையில் மோகனபிரியா என்பவர் 75 லட்சம் ரூபாயை முதலீடு செய்தாராம். அப்போது திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்து கிளிண்டனிடம் கேட்டாராம்.
அதற்கு கிளிண்டன், "அதெல்லாம் பிசினஸ் என்றால் அப்படித்தான், நஷ்டமும் லாபமும் ஒரு சேர வரும். ஆனால் எப்படியும் விட்டதை விட நிறைய பிடித்துவிடலாம், கவலைப்பட வேண்டாம். வேறு பணத்தை முதலீடு செய்" என்றாராம்.
இதை நம்பிய மோகனபிரியா, தனது காரை விற்று 12 லட்ச ரூபாயை முதலீடு செய்தார். இதையடுத்து நல்ல தொகையை பார்க்கலாம் என ஆசையாக இருந்த அவருக்கு திடீரென மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதாவது அந்த பணத்தையும் மோகன பிரியா இழந்தார். அதன் பின்னரும் பேராசையை விடாத மோகனபிரியா, தனது வீட்டை அடமானம் வைத்து பணத்தை முதலீடு செய்தாராம். ஆனால் அந்த பணமும் போய்விட்டதாம்.
இதையடுத்து மோகனபிரியா, கிளிண்டன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கிளிண்டனுக்குத் திருமணம் நடைபெற இருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்தனர். உடனே திருமண மண்டபத்திற்கே வந்த மோகனபிரியாவும் இன்னும் சில பாதிக்கப்பட்டவர்களும் உறவினர்களும் சேர்ந்து புது மாப்பிள்ளையாக இருந்தவரை கடுமையாக தாக்கினர்.

இதில் சட்டை கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனால் அந்த மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் சென்னை உத்தண்டியை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரிடம் சென்னையை சேர்ந்த ஜனனி என்பவர் அறிமுகமானாராம்.
அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் கொள்ளை லாபம் ஈட்டலாம் என கூறி, டாக்டரிடம் இருந்து ரூ 1.74 கோடியை பெற்றாராம். பங்கு சந்தையில் இருந்து தனக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த மருத்துவர், ஜனனியிடம் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னர் அவர் தாம்பரம் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காதலன் சரவணக்குமார் என்பவருடன் சேர்ந்து ஜனனி, கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. மோசடி வழக்கில் ஜனனி, அவரது தாயாரை போலீஸார் கைது செய்தனர்.
-
Gold Price: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. கலக்கத்தில் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications