சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முரட்டு ஹிட்டர்.. அசுர வேக பவுலர்.. மும்பையோடு மோதி சிஎஸ்கே தூக்கிய இளம் வீரர்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே அணியில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் என்ற 19 வயதே கொண்ட இளம் வீரர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் 2022 ஏலம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த ஏலத்தில் பல அதிரடி திருப்பங்கள் இன்று ஏற்பட்டன.

சிஎஸ்கே அணியில் இன்று ஷிவம் துபே ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல் பல இளம் வீரர்களும் ஏலம் எடுக்கப்பட்டனர். சில பெரிய வீரர்களுக்கு முயன்று கடைசியில் முடியாமல் சிஎஸ்கே பின்வாங்கியது.

சோகம்! கடைசி வரை முயன்ற சிஎஸ்கே.. தூக்கிய ஆர்சிபி.. நிறைவேறாமல் போன டிகே கனவு -என்ன நடந்தது?சோகம்! கடைசி வரை முயன்ற சிஎஸ்கே.. தூக்கிய ஆர்சிபி.. நிறைவேறாமல் போன டிகே கனவு -என்ன நடந்தது?

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணி இன்று ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் என்ற இளம் வீரரை ஏலம் எடுத்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி. மும்பை அணி தொடக்கத்தில் இருந்தே இவரை எடுக்க முயன்றது. தொடக்கத்தில் இருந்தே இவரை எடுக்க மும்பை - சிஎஸ்கே இடையே கடும் போட்டி நிலவியது. 1.40 கோடி ரூபாய் வரை மும்பை இவரை எடுக்க தீவிரம் காட்டியது.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

ஆனால் சிஎஸ்கே அணி இவரை விட்டுக்கொடுப்பதாக இல்லை. கடைசியில் மும்பை அணி இவரை 1.50 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்பவில்லை. இதனால் சிஎஸ்கே அணி ஒன்றரை கோடிக்கு ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை மும்பை தட்டி தூக்கியது. இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர்.

 ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்

ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்

பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இன் ஸ்விங் செய்வார். அதோடு இவரின் இன்னொரு சிறப்பம்சம். இவர் சிறப்பான பேட்ஸ்மேனும் கூட. கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன். அண்டர் 19 போட்டிகளில் இவர் முரட்டு அடி அடித்த ஆட்டங்கள் பல உள்ளன.

பாஸ்ட் பவுலர்

பாஸ்ட் பவுலர்

ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விப் ஷாட் என்று விதவிதமாக சிக்ஸ் அடிக்க கூடியவர். கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெல்ல இவரும் முக்கிய காரணமாக இருந்தார். இதில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 141 கிமீ வேகத்தில் பவுலிங் வீசினார். லோக்கல் போட்டிகளில் இவர் 148 கிமீ வரை பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். சிஎஸ்கே அணியில் சாகர் போல அடுத்த இளம் ஸ்டாராக இவர் உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
IPL 2022: CSK took young super star Rajvardhan Hangargekar in the auction today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X