தோனி பினிஷிங்கை விடுங்க.. சிஎஸ்கேவை வெற்றி டிராக்கிற்கு கொண்டு வந்த அந்த ஒரு ஓவர்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தல தோனி ஆட்டத்தை "மீண்டும்" பினிஷ் செய்தார்.
Recommended Video
நேற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மோசமான தொடக்கத்தை கொடுத்து திணறி திணறி ஒருவழியாக 155/7 ரன்கள் எடுத்தது. இதை சிஎஸ்கே அணி எளிதாக எடுத்துவிடும் என்றே கருதப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, கடைசியில் தோனி வந்து அதிரடி காட்டி ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

நல்ல தொடக்கம்
நேற்று சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு 40 ரன்கள், உத்தப்பா 30 ரன்கள் எடுத்தனர். இவர்கள் கொஞ்சம் நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் கடைசியில் வந்த பிரிட்டோரியஸ் 1 சிக்ஸ், 2 பவுண்டரி என்று மொத்தம் 22 ரன்களை வெறும் 14 பந்துகளில் எடுத்தார். தொடக்கத்தில் 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டு இருந்த தோனி ஓவரில் அப்படியே ருத்ர தாண்டவம் ஆட தொடங்கினார்.

தோனி
கடைசி 4 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ், பவுண்டரி, 2 ரன்கள், கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரி என்று தோனி போட்டியை பினிஷ் செய்தார். தோனியின் இந்த அசத்தல் ஆட்டம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் வரிசையாக 7 போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது.

காரணம்
நேற்று சிஎஸ்கே வெற்றிபெற முக்கிய காரணம் தோனி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தி கடைசியில் பினிஷ் செய்தது அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். அதே சமயம் நேற்று சிஎஸ்கே அணியின் பவுலிங்கும் மிக சிறப்பாக இருந்தது. அதிலும் இளம் வீரர் முகேஷ் சவுத்திரி முதல் ஓவர்தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டது.

விக்கெட்
முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே சான்டனரிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் டக் அவுட் ஆனார். பின்னர் அதே ஓவரில் முகேஷ் வீசிய 5வது பந்தில் இஷான் கிஷன் அவுட் ஆனார். இந்த யார்க்கர் பந்து குத்திய வேகத்தில் இஷான் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஸ்டம்ப் பறந்த சத்தம் இன்னும் அவர் காதுக்குள் கண்டிப்பாக கேட்டுக்கொண்டு இருக்கும். அந்த ஓவரிலேயே மும்பை அணியின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது.

தோல்வி
அதன்பின் மீண்டும் குட்டி ஏபிடி பிராவிசை 3வது ஓவரின் கடைசி பந்தில் முகேஷ் விக்கெட் எடுத்து அசத்தினார். முகேஷ் இந்த சீசனில் சாகர் இல்லாத காரணத்தால் அணியில் இடம்பிடித்து உள்ளார். முகேஷ் முதல் போட்டியில் சரியாக ஆடாத நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் சிஎஸ்கே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது.

சிறப்பான பவுலிங்
டெத் ஓவர்களில் இவர் சரியாக பவுலிங் செய்யாத நிலையில், பவர் பிளேவில் மட்டுமே தற்போது பயன்படுத்துகிறார். அந்த பவர் பிளேவிலும் இவர் சிறப்பாக பவுலிங் செய்து நம்பிக்கை அளித்துள்ளார். சிஎஸ்கே அணியில் சாகர் இல்லாத இடத்தை தற்போது முகேஷ் பூர்த்தி செய்து இருக்கிறார். நல்ல வேகம், யர்க்கர், ஸ்விங் இருப்பதால் வரும் காலங்களில் இந்திய அணியில் இவர் தேர்வாகும் வாய்ப்புகளும் கூட உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications