சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இது துரோகம்".. அதிக அன்பு வைத்தால் இப்படித்தான்.. கண்டுகொள்ளாத தோனி.. கொதிக்கும் ரெய்னா பேன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் தற்போது ரெய்னா ரசிகர்கள் பலர் சிஎஸ்கேவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் சிலர் தோனியையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

2022 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ளது. சிஎஸ்கே அணி முடிந்த அளவு பழைய அணியை உருவாக்க முயன்று பல வீரர்களை எடுத்துள்ளது. பிராவோ, உத்தப்பா, சாகர், மிட்சல் சாண்ட்னர், ராயுடு, கேஎம் ஆசிப் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

தோனி, ஜடேஜா, ருத்துராஜ் ஏற்கனவே அணியால் ரீ டெயின் செய்யப்பட்டுவிட்டனர். இது போக டு பிளசிஸ், ஷரத்துல் தாக்கூர் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் எடுக்க முடியாமல் போய்விட்டது.

ஏன் இப்படி? லிஸ்டில் பெயரை கூட தராத சிஎஸ்கே.. ரெய்னாவிற்கு நடந்தது என்ன? பின்னணியில் வேறு காரணம்? ஏன் இப்படி? லிஸ்டில் பெயரை கூட தராத சிஎஸ்கே.. ரெய்னாவிற்கு நடந்தது என்ன? பின்னணியில் வேறு காரணம்?

சிஎஸ்கே ஐபிஎல்

சிஎஸ்கே ஐபிஎல்

நேற்று சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல் பல இளம் வீரர்களும் ஏலம் எடுக்கப்பட்டனர். ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, சிம்ரன்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஸ்சான் போன்ற புதிய படை சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவன் கான்வாய் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் சிஎஸ்கேவிற்கு ஒன் டவுன் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய சிஎஸ்கே டீம்

புதிய சிஎஸ்கே டீம்

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்படவில்லை. இவரை கடைசி வரை சிஎஸ்கே எடுக்க முயற்சி செய்யவே இல்லை. அதிலும் கடைசி கட்டத்தில் மறு ஏலத்தில் கூட சிஎஸ்கே இவரை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட எடுக்க முயற்சி செய்யவில்லை. சிஎஸ்கேவின் இந்த முடிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெய்னா

ரெய்னா

இந்த நிலையில் ரெய்னாவின் ரசிகர்கள் பல இணையத்தில் சிஎஸ்கேவை விமர்சனம் செய்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக பல வருடங்களாக தொடர்ந்து ஆடியவர் ரெய்னா. சிஎஸ்கே அணியை அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவரை திடீரென புறக்கணித்தது ஏன் என்று பலர் கேட்டு உள்ளனர். அதோடு ரெய்னாவின் முந்தைய ரெக்கார்டுகளை இவர்கள் போட்டு விமர்சனம் செய்துள்ளனர்.

தோனி

தோனி

ரெய்னா சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்த போட்டிகளை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். சிஎஸ்கே அணி ரெய்னாவிற்கு துரோகம் செய்துவிட்டது. அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர். சில ரெய்னா ரசிகர்கள் தோனியையும் விமர்சனம் செய்துள்ளனர். அதில், தோனியை ரெய்னா மிகவும் நம்பினார். ஆனால் ரெய்னா ஏமாற்றப்பட்டுள்ளார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

தோனியாவது ரெய்னாவை அணியில் எடுக்க குரல் கொடுத்து இருக்க வேண்டும். அவர் சொல்லி இருந்தால் ரெய்னாவை எடுத்து இருப்பார்கள். தோனிக்காக ரெய்னா எதையும் செய்வார். ஆனால் ரெய்னாவிற்காக தோனி இதை கூட செய்யவில்லை. தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற போது ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அந்த அளவிற்கு ரெய்னா அன்பு வைத்து இருந்தார என்று ரெய்னா ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். அதிகம் அன்பு வைத்தால் இப்படித்தான்.. என்று ரெய்னா ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

English summary
IPL 2022: Raina fans are not happy with Dhoni and CSK decision to let go MR IPL in the auction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X