அவ்வளவு கோடியா? ரீடெயின் பண்ண முடியாது.. கழற்றி விட்ட அணி.. ஐபிஎல்லை அதிர வைக்க போகும் வீரர்!
சென்னை: 2022 ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான வீரர் ஒருவர் மிக அதிக தொகைக்கு ஏலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த வருடம் ஜனவரி -பிப்ரவரியில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக இன்று வீரர்களை தக்க வைக்கும் ரீடெயின் நிகழ்வு நடக்க உள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த 4 வீரர்கள் யார், யாரெல்லாம் நீக்கப்பட உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. 2 மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை

எதிர்பார்ப்பு
அதன்படி சிஎஸ்கே அணி தோனி, ருத்துராஜ், ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோரை ரீடெயின் செய்யும் என்று உறுதியாகி உள்ளது. டெல்லி அணி பண்ட், அக்சர் பட்டேல், ஷா, நோர்ட்ஜ் ஆகியோரை தக்க வைக்க உள்ளது. கொல்கத்தா அணி ரசல், நரேன், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை தக்க வைக்க உள்ளது.

மற்ற அணிகள்
மற்ற அணிகள் யாரை எல்லாம் தக்க வைக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் ஹைதரபாத் அணி கேன் வில்லியம்சனை மட்டுமே தக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அணியில் வார்னர் மீண்டும் எடுக்கப்பட மாட்டார். அணியில் இருந்து என்சிஏ பணிகளுக்காக லட்சுமணன் வெளியேறிவிட்டார்.

வெளியேற்றம்
இதனால் மொத்தமாக ஹைதராபாத் அணி மாற உள்ளது. இதன் காரணமாக கேன் வில்லியம்சன் மட்டுமே அணியில் எடுக்கப்பட உள்ளார். மாறாக ரஷீத் கானையும் அந்த அணி ரீடெயின் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் ரஷீத் கான் 16 கோடி ரூபாய் கேட்டதாக தெரிகிறது. இத்தனை கோடி கேட்டதால் ஹைதராபாத் அணி இவரை எடுக்கும் திட்டத்தில் இல்லை என்கிறார்கள். இதனால் ரஷீத் ரீடெயின் செய்யப்பட வாய்ப்பு இல்லை. இதனால் அவர் ஏலத்திற்கு வருகிறார்.

ஏலம்
ரஷீத் கான் 2022 ஐபிஎல் ஓபன் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவர் பல கோடிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஐபிஎல்எல்லையே அதிர வைக்கும் அளவிற்கு பல கொடிகளை இவருக்கு ஐபிஎல் அணிகள் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே லக்னோ அணி அல்லது அஹமதாபாத் அணி இவரை டிராப்ட் முறையில் பல கோடி கொடுத்து எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன.