சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவருக்கு" மாற்று.. சிஎஸ்கேவில் ஷிவம் துபேவா! இவரை ஏன் எடுத்தாங்கன்னு புரியலையா? இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே அணியில் இந்த முறை ஷிவம் துபே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

2022 ஐபிஎல் தொடருக்கான கடைசி நாள் ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. சிஎஸ்கே அணி நேற்று பழைய சிஎஸ்கே வீரர்களை குறி வைத்து ஏலம் எடுத்தது.

இருப்பினும் சிஎஸ்கே அணி டு பிளேஸிசை பெங்களூரிடமும், ஷர்துல் தாக்கூரை டெல்லியிடமும் இழந்தது. நேற்று ரெய்னாவை சிஎஸ்கே ஏலம் எடுக்கவில்லை.

ப்பா என்ன ஒரு ஸ்ட்ராட்டஜி.. மற்ற டீம்களை ஏற்றிவிட்டு.. ஏலத்தில் கேம் ஆடிய சிஎஸ்கே.. நோட் பண்ணீங்களா?ப்பா என்ன ஒரு ஸ்ட்ராட்டஜி.. மற்ற டீம்களை ஏற்றிவிட்டு.. ஏலத்தில் கேம் ஆடிய சிஎஸ்கே.. நோட் பண்ணீங்களா?

 சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் இந்த முறை ஷிவம் துபே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளில் ஐபிஎல்லில் ஆடினார். ராஜஸ்தான் சிஎஸ்கே அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெறும் 42 பந்தில் 64 ரன்களை ஷிவம் துபே எடுத்தார். லெப்ட் ஆர்ம் பேட்டிங் செய்யக் கூடியவர் ஷிவம் துபே.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

அதேபோல் இவர் ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் பவுலிங் செய்யும் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியில் துபே சரியாக ஆடவில்லை என்றாலும் கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் கொஞ்சம் சுமாராக ஆடினார். இந்திய அணியில் ஒரு சில போட்டிகளில் ஆடி இருந்தாலும் பெரிதாக ஈர்த்தது இல்லை. ஆனால் லோக்கல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.

யார் இவர்?

யார் இவர்?

முக்கியமாக முதல் தர போட்டிகளில் ஷிவம் துபே தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருகிறார். தற்போது சிஎஸ்கே அணி இவரை எடுத்தது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியில் மீடியம் பாஸ்ட் ஆல் ரவுண்டர் இல்லை. ஏற்கனவே இருந்த ஷர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி டெல்லியிடம் இழந்துவிட்டது.

மீண்டு வருவார்?

மீண்டு வருவார்?

இன்னொரு பக்கம் விஜய் ஷங்கரை சிஎஸ்கே அணி எடுக்க முயன்றது. ஆனால் அவரையும் குஜராத் அணியிடம் சிஎஸ்கே இழந்துவிட்டது. ஜடேஜா, மொயின் அலி உள்ளிட்ட இரண்டு ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். ஆனால் சிஎஸ்கே அணியிடம் மீடியம் பாஸ்ட் ஆல் ரவுண்டர் இல்லை. இதையடுத்தே தற்போது சிஎஸ்கே அணி இவரை அணியில் எடுத்துள்ளது. இவரை சிஎஸ்கே எடுத்தது அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது.

பார்ம் முக்கியம்

பார்ம் முக்கியம்

பொதுவாக சிஎஸ்கே அணியில் வரும் வீரர்கள் திடீரென பார்ம் பெறுவது வழக்கம். நெஹ்ரா, ராயுடு, வாட்சன், உத்தப்பா என்று பார்மில் இல்லாத பல வீரர்கள் சிஎஸ்கேவிற்கு வந்து பார்மிற்கு திரும்பி உள்ளனர். அப்படி இந்த முறை ஷிவம் துபேவும் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
IPL 2022: Why CSK team took Shivam Dube in the auction today?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X