சென்னை வாகன ஓட்டிகளுக்கு அலார்ட்..இந்த சாலைகளில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்..தெரியாமல் போகாதீங்க
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசல் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும்.

வாகன ஓட்டிகள் நினைத்த நேரத்திற்குள் வீடு, அலுவலகம் சென்று சேருவது எல்லாம் ஏதோ சாதனை போலத்தான் கருத முடியும். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமாகவே இப்படித்தான் நிலை என்றால் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காண முடிகிறது.
அதிலும் போட்டி தொடங்கும் நேரத்திற்கு முன்பாக சாலை முழுவதும் ரசிகர்கள் கூட்டமாகத்தான் காண முடியும். வாலஜா சாலை தொடங்கி சிவானந்தா சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பிளே ஆஃப் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் வரும் 23 ஆம் தேதி முதல் குவாலிபையர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில், ரசிகர்கள் கூட்டம் மைதானம் நிரம்பி இருக்கும்.
எனவே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் 2 நாட்களில் போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
* அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்படாது. வெலிங்டன் பாயிண்ட்-பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். போர் நினைவிடத்தில் இருந்து வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயிண்ட் வழியாக கொடி மரச் சாலை வழியாக அவர்களது இலக்கை சென்றடையலாம்.
* பாரதி சாலை- பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. கண்ணகி சிலை அல்லது ரத்னா கபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
* தொழிலாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும். பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் யு டர்னில் செல்ல அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக, வாகனங்கள் லிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதி அளிக்கப்படும். அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் சாலை வழியாக ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்ல அனுமதி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications