இதுக்கா அவரை எடுத்தோம்?.. மூத்த வீரரின் ஐபிஎல் ஆட்டத்தால் சீறிய பிசிசிஐ மேலிடம்.. விரைவில் ஆக்சன்!
சென்னை: ஐபிஎல் தொடரில் ஆடி வரும் மூத்த இந்திய வீரர் ஒருவர் மீது பிசிசிஐ தேர்வுக்குழு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2021 தொடரில் பல முக்கியமான இந்திய வீரர்கள் சரியாக ஆடாமல் ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். முக்கியமாக இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் தேர்வான பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார்கள். பிசிசிஐ அதிகம் எதிர்பபார்த்த அதிரடி வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஏமாற்றம் அளித்து வருகிறார்கள்.
சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்கள் பார்மை இழந்து கடுமையாக திணறிக் கொண்டு இருக்கிறார்கள். அஸ்வின், அக்சர் பட்டேல் போன்ற டி 20 இந்திய அணியில் எடுக்கப்பட்ட பவுலர்களும் மோசமாக ஆடி வருகிறார்கள்.

டெத் ஓவர்
அதேபோல் டெத் ஓவர்களில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரும் மிக மோசமாக பவுலிங் செய்து வருகிறார்கள். இந்திய அணியின் மூத்த வீரர்கள் இப்படியா டெத் ஓவர்களில் சொதப்புவது என்று அதிர்ச்சி அளித்து வருகிறார்கள். இவர்களின் மோசமான ஆட்டம் காரணமாக ஒரு பக்கம் பிசிசிஐ அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால் டி 20 உலகக் கோப்பை தொடர் வந்துவிட்டால் இவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை பிசிசிஐ அமைப்பிடம் உள்ளது.

நன்றாக ஆடுவார்கள்
இதில் பிசிசிஐ அமைப்பிற்கு அதிகம் அதிர்ச்சி அளித்தவர் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். ஹர்திக் பாண்டியாவை பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திய அணியில் எடுத்தனர். பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் என்ற காரணத்தால் இவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர். வெறும் பேட்ஸ்மேன் என்றால் இவரை அணியில் எடுத்து இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 2 வருடமாக பவுலிங் செய்யாமல் சொதப்பி வருகிறார்.

சர்வதேச போட்டி
சர்வதேச போட்டிகளில் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. ஏன் ஐபிஎல் போட்டியிலும் இரண்டு சீசனாக இவர் பவுலிங் செய்யவில்லை. இவர் பவுலிங் பார்மில் இருக்கிறாரா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் இவர் பவுலிங் போட வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்வியாக உள்ளது. இதனால் பிசிசிஐ தேர்வுக்குழுவினர் ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாவை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் எடுக்க வாய்ப்பு இல்லை. அவரை அணியில் எடுத்தது ஆல் ரவுண்டர் ஆப்ஷனுக்காகத்தான். அவரை வெறும் பேட்ஸ்மேன் ரோலுக்காக நாங்கள் எடுக்க விரும்பவில்லை.. அதுக்கா அவரை எடுத்தோம்.. ப்யூர் பேட்ஸ்மேன் என்றால் வேறு வீரர்களை எடுத்து இருப்போமே.. என்று பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியா மீது கொதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஆடும் அணியில் பிசிசிஐ எடுக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

ஆக்சன்
எதிர் காலத்தில் ஹர்திக் பாண்டியா மீது இதனால் நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. நடவடிக்கை என்றால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் போன்ற மாற்று ஆல் ரவுண்டர் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவிற்கு நீண்ட காலம் இந்திய அணியில் ஆடும் வாய்ப்புகள் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications