Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வன விலங்குகளால் பயிர் சேதம்! நிரந்தர தீர்வு என்ன? அதிகாரிகளுக்கு இறையன்பு போட்ட 5 முக்கிய உத்தரவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு காண்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

அதில் 5 முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து விவசாயிகளின் இன்னலுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடத்தில் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

Iraianbu held an consultative meeting on finding a permanent solution to avoid crop damage caused by wild animals

இது தொடர்பான விவரம் வருமாறு;

யானை, காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு போன்ற வன விலங்குகளினால் மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி உள்ள பகுதிகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, நிலக்கடலை, வாழை போன்ற உயர் மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து, மாநிலத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்ட நாட்களிலும், வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களிலும், கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வின் போதும், துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், துறை செயலாளர்களுக்கும் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

Iraianbu held an consultative meeting on finding a permanent solution to avoid crop damage caused by wild animals

இது குறித்து விவசாயிகள் சில உள்ளூர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்றி வந்தாலும், வனவிலங்கு பாதிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

எனவே, இத்தகைய வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பயிர்களை பாதுகாப்பது எப்படி, சட்டரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இயலும் என்பது தொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமைச் செயலகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

Iraianbu held an consultative meeting on finding a permanent solution to avoid crop damage caused by wild animals

கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.

1.வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து, அதற்கான தீர்வினை அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

2.பயிர்களை பாதிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்புக்காக, வனவிலங்குகளினால் பயிர்பாதிப்பு, விவசாயிகளின் புகார்கள், பயிர் சாகுபடி பரப்பு குறைவு மற்றும் மாற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆண்டுவாரியாகவும், மாவட்டவாரியாகவும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உடனடியாக சேகரித்து குழுவுக்கு அளிக்கவேண்டும்.

Iraianbu held an consultative meeting on finding a permanent solution to avoid crop damage caused by wild animals

3.மாவட்டவாரியாக பெறப்படும் புள்ளி விபரங்களை, வனத்துறையினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுடன் ஒப்பிட்டு, வனவிலங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தினை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

4.மேலும், இக்குழு, உடனடியாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நேரில் சென்று, வனவிலங்குகள் பாதிப்புக்கு அம்மாநிலங்களால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தெரிந்துகொண்டு, அதற்கான அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

5.மேற்காணும்விபரங்களைவிரிவாகஆய்வுசெய்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். விவசாயிகளின் இன்னலுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், இப்பணிகள் அனைத்தையும் ஒரு மாதகாலத்திற்குள் முடித்து, உரிய பரிந்துரையுடன் அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு, தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+