ஈரான் வான்வழி தாக்குதல்.. பஹ்ரைனில் கேட்ட வெடி சத்தம்! கள நிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. பஹ்ரைனிலும் வெடிச்சத்தம் கேட்கும் நிலையில், அங்கு களத்தில் என்ன நடக்கிறது என்ற விவரத்தை ஒன் இந்தியா நேரடியாக பெற்றுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே நீண்ட நாட்களாக பதற்றமான சூழல் அதிகரித்து இருந்த நிலையில் இன்று திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டாக ஈரான் மீது குண்டு மழை பொழிந்தது. அமேனியின் அலுவலகம் மற்றும் வீட்டை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

Iran Launches Airstrikes Near US Bases in Bahrain Tamil Resident Reports live

நேரிலேயே எங்களுக்கு சத்தம் கேட்கிறது

மேலும் ஈரான் தலைநகர் தெஹ்ரான், தெற்கு தெஹ்ரான் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் பள்ளி மீது விழுந்து ஏவுகணை வெடித்து சிதறியதில் 80-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலியாகினர். இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரானும் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஈரானும் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் என அமெரிக்க படைத் தளங்கள் உள்ள இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5 வது கடற்படை தளம் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரான் நடத்திய பதில் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் முறையாக நேரில் பார்ப்பதால்

இந்த நிலையில் பஹ்ரைனில் வசித்து வரும் இந்தியர்களும் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், ஈரான் தாக்குதல் நடத்துவதால் கேட்கும் வெடிச்சத்ததினை நேரில் உணர்ந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். டிவியில் பலரும் பார்த்து வந்தாலும், நேரிலேயே அந்த சத்தம் எங்களுக்கு கேட்கிறது. இப்போது கூட என்னால் அந்த சத்தத்தை கேட்க முடிகின்றது.

இந்த தாக்குதலில் தற்போது வரை உயிர்ச்சேதம் என்பது இல்லை. ஈரான் அமெரிக்காவின் படைத்தளங்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்துகிறது. இருந்தாலும் முதல் முறையாக இப்படி போரை பார்பதனால் இங்கு இருக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் வேறு இடத்திற்கு மாறி வருகின்றனர்.

போர் முடிந்தால் போதும்

தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகமும் என்னென்ன தகவல்கள் வருகிறதோ அதை எல்லாம் வந்துகொண்டு இருக்கிறது. அவசர கால எண்கள் கொடுத்து இருக்கிறார்கள். எல்லா உதவியும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த போர் அப்படியே முடிந்துவிட்டால் நல்லா இருக்கும்.." என்று கூறினார். இது தொடர்பான முழு பேட்டியை இங்கு காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+