Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய கிழக்கில் வெடித்துள்ள பிராந்திய போர் இந்தியப் பங்குச்சந்தைகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரின் தாக்கத்தினால் இந்திய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.31 லட்சம் கோடியை இழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பங்குச்சந்தைகள் மிக மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடங்கியது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனால் சர்வதேச அளவில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

Iran tension Wipes Out Rs 31 Lakh Crore Indian stock Markets loss Rs 12 Lakh Crore gone in a Day
Photo Credit:

இந்தியப் பங்குச்சந்தை

இந்த மோதல் இப்போது இந்தியப் பங்குச்சந்தையைப் பாதித்துள்ளது. இந்த போர் காரணமாக இந்திய முதலீட்டாளர்களின் சுமார் ₹31 லட்சம் கோடியை இழந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவை இந்தியப் பங்குச்சந்தையைச் சரிவில் தள்ளியது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருப்பதால் இது பெரிய சவாலாக உள்ளது.

இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் ₹12.78 லட்சம் கோடி மார்கெட் வெல்யூவை இந்தியப் பங்குச்சந்தைகள் இழந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1352 புள்ளிகள் குறைந்து, 77,566 புள்ளிகளாக உள்ளன. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50, 422 புள்ளிகள் குறைந்து, 24,028ஆக உள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய பங்குச்சந்தைகள் இந்தளவுக்குச் சரிந்ததே இல்லை. அப்படியொரு மிக மோசமான சரிவை இந்தியப் பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளது.

ரூ.31 லட்சம் கோடி

புவிசார் அரசியல் பதற்றத்தால் இந்த நிறுவனங்களின் சந்தை மூலதனம் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை டேட்டாவின்படி, பிப்ரவரி 28ம் தேதி ₹463 லட்சம் கோடியாக இருந்த மார்கெட் வெல்யூ, மார்ச் 6ம் தேதி ₹444 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது ₹19 லட்சம் கோடி குறைந்தது. மார்ச் 9 அன்று வர்த்தகத்தின் போது, ₹432 லட்சம் கோடியாக, அதாவது மேலும் ₹12 லட்சம் கோடி சரிந்து. அதாவது போர் ஆரம்பித்த பிப்ரவரி 28ம் தேதி முதல் இப்போது வரை மட்டும் ₹31 லட்சம் கோடி இழப்பை இந்திய முதலீட்டாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்..

காரணம்

மத்திய கிழக்கு மோதல் கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே வாரத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 25%க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் $114ஐக் கடந்தது. இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 85% இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பணவீக்கம், வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதி அழுத்தங்கள் குறித்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது. மேலும், இது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.

கடும் சரிவு

போர் பதற்றத்தால் கடந்த 4 நாட்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் ₹21,000 கோடியை விற்றுள்ளனர். இந்த விற்பனை அனைத்து துறைகளிலும் பரவலாக இருந்தது. இதனால் எல்லா நிறுவனங்களும் கணிசமாகச் சரிந்துள்ளன. குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி 3%க்கு மேலாகவும், ஐசிஐசிஐ வங்கி சுமார் 4.5% ஆகவும் சரிந்தன. பாரத ஸ்டேட் வங்கி 5%க்கு மேலாகவும், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட 5% ஆகவும் சரிவு கண்டன. இந்த மோதல் தொடரும்பட்சத்தில் அது மிக மோசமான பாதிப்பையே இந்தியச் சந்தைகளில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+