ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல்
ஜெருசலேம்: ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லமபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சும் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானை நம்பகமான நாடாக இந்த விஷயத்தில் பார்க்கவில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தாக்குதல் தொடுத்தன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்தது.

மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான்
ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை வீசிய நிலையில், இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரான் - அமெரிக்க போர் நீடித்த நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபம் அடைந்த ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பாகிஸ்தானை நம்ப முடியாது
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார். இதற்கிடையே, பாகிஸ்தானை நம்பகமான நாடாக இந்த விஷயத்தில் பார்க்க முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவென் அசார் இது தொடர்பாக கூறுகையில், ஈரான் - அமெரிக்கா போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ததாக கூறும் பாகிஸ்தானை நம்பகான நாடாக இஸ்ரேல் பார்ப்பது இல்லை.
பாகிஸ்தானின் சேவையை பெறுவதில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட நலன்கள் இருக்கலாம். தெற்கு லெபனானில் "ஹிஸ்பொல்லா தீவிரவாத கட்டமைப்பு" இல்லாத நிலையை உருவாக்குவதே இஸ்ரேலின் நோக்கம். ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இருந்து வடக்கு எல்லையை காப்பாற்றுவது இஸ்ரேலின் உரிமை. கடந்த சில மணி நேரங்களில் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கொன்று இருக்கிறோம்
லிட்டானி நதியின் தெற்கில் ஹிஸ்பொல்லா இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. லெபனான் அரசு வெறும் பேச்சில் மட்டுமின்றி, ஹிஸ்பொல்லாவின் திறன்களை அகற்றும் வகையில் முக்கியமான பங்காற்ற வேண்டும். அதனால் வடக்கு பகுதியில் உள்ள எங்கள் சமூகங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகாது என்பதை உறுதிப்படுத்த முடியும்," என்றார்.
-
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications