இந்திய ரயில்வேயின் பாரத் கவுரவ் ஆன்மீக யாத்திரை ரயில்கள்.. ஜூலை 1 முதல் இயக்கம்..கட்டணம் எவ்வளவு
சென்னை: பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் வருகிற ஜூலை 1ஆம் தேதி கொச்சுவேலியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார். இந்த பயணம் ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே பொதுமேலாளர் ரவிக்குமார் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் வருகிற ஜூலை 1ஆம் தேதி கொச்சுவேலியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.

இந்த பயணம் ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டும். 11 பகல், 12 இரவுகள் ஸ்லீப்பர் வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.23 ஆயிரத்து 350, ஏ.சி. வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரத்து 350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சார்தாம் யாத்திரைக்கு வருகிற 28ஆம் தேதி சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு ரயில் பயணம் செல்கிறது. 13 நாட்கள் பயணத்துக்கு ரூ.61 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காசி, கயா சிறப்பு யாத்திரைக்கு வருகிற 16ஆம் தேதி திருச்சியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கயா, காசி, அலகாபாத் அயோத்தியா செல்கிறது. 7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.irctctourism.com இணையதளத்திலோ அல்லது 9003140680/682, 8287932122, 8287932070 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் ரவிக்குமார் கூறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications