17 இருளர் குடும்பத்துக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்.. சென்னை தாசில்தார், எம்எல்ஏ அசத்தல்.. ஹேப்பி
சென்னை: சென்னை மாநகராட்சியில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை சேகரித்து, வாழ்க்கை நடத்திவரும் இருளர் பழங்குடியினர் விடுத்திருந்த கோரிக்கையானது, தற்போது நிறைவேறியிருக்கிறது. இதையடுத்து, 17 இருளர் குடும்பங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

சொத்துவரி: குறிப்பாக, ரூ.5 ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்களுக்கு இந்த கியூஆர் குறியீட்டுடன் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர்கள் இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்த முடியும். மேலும் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருக்கும் 2 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மாநகராட்சியில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை சேகரித்து வாழும் இருளர் குடும்பங்களுக்கு பழங்குடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கெனவே பிரத்யேகமான நிகழ்ச்சியும் நடந்துள்ளது..
குப்பை கிடங்குகள்: சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர் அருகே நலிவுற்ற இருளர் வகுப்பை சேர்ந்த 17 குடும்பங்கள் சாலையோரம் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள், மாநகராட்சியில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை சேகரித்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் ஜீவனாம்சம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கென எந்த அடையாள அட்டையும் இல்லை.. அதனால், தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.. எனவே, தங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணியிடம் மனு அளித்திருந்தனர்.
தண்டையார்பேட்டை: அதன்படியே, 17 குடும்ப தலைவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் நடத்தப்பட்டது. தாசில்தார் சகாயராணி முன்னிலையில், கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பழனியராஜன், கிராம நிர்வாக அலுவலர் சுப்ரியா, மண்டல உதவி ஆணையர் விஜயபாபு, செயற்பொறியாளர் பாபு உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு 17 குடும்ப தலைவர்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கினார். பிறகு, சாதி சான்றிதழ் பெற்றவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டது.
அரசு சலுகைகள்: தற்போது தரப்பட்டுள்ள சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தங்களுக்கு தேவையான ஆதார் அடையாள அட்டை மற்றும் தமிழக அரசின் சலுகைகளை எளிதாக இவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன், உடனடியாக அடையாள அட்டைகளை வழங்கியிருப்பது, இருளர் பழங்குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications