சர்ருன்னு 30% ஏறிய நில வழிகாட்டி மதிப்பு? பத்திரப்பதிவில் மாற்றம்? தமிழக பதிவுத்துறை விளக்கம் தருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை மூலம் நிலம் விற்பனை, குத்தகை ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.. இதற்காக முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி, வழிகாட்டி மதிப்புகள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று பரவி, பரபரப்பை தந்து வருகிறது.. இதன் உண்மைத்தன்மை தெரியாததால், நிலம் வாங்குபவர்களும் குழப்பத்தில் உள்ளார்களாம்.

ஒரு வீட்டு மனை வாங்குவதாக இருந்தால், அதற்கு சந்தை வழிகாட்டி மதிப்பு அறிய வேண்டும்.. நிலத்தின் சர்வே எண், கிராமத்தின் பெயர், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற விவரங்களை அளித்தால், அந்த நிலத்துக்கான அரசின் வழிகாட்டி மதிப்பு தெரிய வரும். சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொண்டு இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

Tamil Nadu Registration Department land guide value

பதிவுத்துறை - வழிகாட்டி மதிப்பு

வழிகாட்டி மதிப்பு என்பது தமிழ்நாட்டில் மாநில அரசால் நிர்ணயிக்கப்படும் ஒரு சொத்தின் குறைந்தபட்ச மதிப்பாகும், இது பதிவுத்துறை நிர்ணயிக்கும் நிலங்களின் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பானது, சொத்து பரிவர்த்தனைகளின் போது இந்த வழிகாட்டி மதிப்பு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

நிலங்களுக்கான சர்வே எண், தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். அரசு துறைகளால், இந்த வழிகாட்டி மதிப்புகள் தான் ஆதாரமாக பார்க்கப்படுகின்றன.

முத்திரைத்தாள் - சொத்து சந்தை மதிப்பு

அந்தவகையில், 2023ல் பிரமாண பத்திரம் ஒப்பந்தம் பொது அதிகாரம் உள்ளிட்ட 22 வகையான பத்திரப்பதிவுகளுக்கு 10 முதல் 33 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டு 2024 மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் சொத்தின் வழிகாட்டி மதிப்பும் உயர்த்தப்பட்டது இதனால் நிலங்களுக்கான சந்தை மதிப்பு, பதிவு கட்டணம் உயர்ந்தன.

அதாவது, தமிழக அரசு கடந்த 2 வருடங்களில், சொத்தின் வழிகாட்டி மதிப்பை, 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது.. சொத்து வழிகாட்டி மதிப்பை, அடிக்கடி அதிகரித்து வெளியிடுவதால், தங்களுக்கு வரி சுமை கூடிக்கொண்டே போகிறது என்று நடுத்தர மக்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

வழிகாட்டி மதிப்பு - பத்திரப்பதிவு

இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஜுன் மாதம், ராஜபாளையம் உள்ளிட்ட சில பத்திரப்பதிவு அலுவலகங்களில், அனைத்து வகையான நிலங்களின் பத்திரப்பதிவிற்கு வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படும் என்று சார் பதிவாளர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவித்திருந்தனர்..

மேலும், வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என நிர்பந்திப்பது சரியல்ல என்றும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

சார் பதிவாளர் - நிலத்தின் மதிப்பு

சார் பதிவாளரை கண்டித்து ஜூன் 30 முதல் 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.. இப்படியொரு அறிவிப்பு வெளியானதுமே, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கேட்பதில்லை என்று விளக்கம் தந்திருந்தார்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை, பதிவுத்துறை மீண்டும் உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

30 சதவீதம் உயர்வு?

சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டங்களில், புதிதாக பதிவுக்கு பத்திரங்கள் வரும்போது, வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் வரை உயர்த்தி, அதற்கு ஏற்ப முத்திரை தீர்வை, கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தாராம். இதனால் அமைச்சரின் உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் சார் பதிவாளர்களும் இறங்கியிருப்பதால் பொதுமக்கள் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

எனினும் இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.. உண்மையிலேயே 30 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதா? இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதாவது வந்ததா? அல்லது புரளியா? என்பது தெரியவில்லை.. எனவே, தமிழக அரசு இதுகுறித்த விளக்கத்தை தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+