எங்கே ஆ. ராசா .. 5 நிமிஷத்தில் "திமுக ஆட்சியை" கலைப்போம்.. கேட்டுத்தான் பாருங்களேன்.. பாஜக வார்னிங்
ஆ ராசா தனித்தமிழ்நாடு குறித்து பேசியதற்கு பாஜக திருப்பதி நாராயணன் கொந்தளித்துள்ளார்
சென்னை: ஆ.ராசா தனித்தமிழ்நாடு கேட்கிறார்.. கேட்டுதான் பாருங்களேன்... அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசியலமைப்பு சாசனம் பிரிவு - 356-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படி கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம் என்று தமிழக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, திமுக மூத்த தலைவரும், எம்பியுமான ஆ ராசா பேசிய பேச்சு, தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது.
Recommended Video
காரணம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடியாகவே கோரிக்கை விடுத்து, ஆ ராசா பேசியிருந்தார்... நாமக்கல்லில் நடந்த திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி"என்ற தலைப்பில் பேசியிருந்தார் ஆ.ராசா..

திமிரில் பேசவில்லை
ராசா பேசும்போது, "எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்றும் பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்.. நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்

பேட்ஜ்கள்
பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்... பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

கெஞ்சி கேட்டுக்கறேன்
அதனால், பாஜக அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

நாராயணன் திருப்பதி
ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக கொந்தளித்துவிட்டது.. உடனடியாக இதற்கு எதிர்வினையும் ஆற்றியது.. அதன்படி, முதல்நபராக பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி தந்தார்.. "அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,மாநில சுயாட்சி தாருங்கள்.அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.. ஈ. வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவு பட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுக விற்கான மிரட்டல்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சூர்யா வார்னிங்
அதேபோல, அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, "முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால், அவருடைய பேச்சு திமுகவின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார்.. இந்நிலையில் ஆ. ராசாவின் பேசுக்கு தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக திமுகவுக்கு வார்னிங் தந்து, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

ஆ. ராசா
அதில், "தனி தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள் - ஆ.ராசா... கேட்டுதான் பாருங்களேன்... அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசியலமைப்பு சாசனம் பிரிவு - 356-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படி கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்" என்று எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டுள்ளார். இப்படி பாஜக தரப்பில் பொங்கி வரும் நிலையில், சோஷியல் மீடியாவிலும் திமுக அரசுக்கு சில கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.. "தமிழ்நாட்டில் என்னதான் நடக்குது? முதலமைச்சர் ஸ்டாலின் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறாரா? ஆ.ராசாவின் பேச்சுக்கு இதுவரை மவுனம் காப்பது ஏன்?" என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்












Click it and Unblock the Notifications