நடிகர் கார்த்திக் உடல் நிலைக் கவலைக்கிடமா? உண்மை என்ன.. வெளியான வீடியோ
சென்னை: பலரும் கார்த்திக் பற்றி பேச தொடங்கினார்கள். இந்த சூழலில் கார்த்திக் உடல் நிலை சரியிலை என்றும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் வதந்திகள் பரவியது. இதனை வதந்தி என்று கௌதம் கார்த்திக் விளக்கம் அளித்தார். ஆனாலும் கேட்பதாக இல்லை. அவருக்கு உடல் நிலை நன்றாக உள்ளது என்று கார்த்தியே வந்து சொன்னால் தான் நம்புவோம் என்பது போல் வதந்திகளை சிலர் பரப்பி வந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கார்த்திக் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் நடத்திய நேர்காணலில் பேசிய இயக்குநர் பாரதி கண்ணன் நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த கார்த்திக் தனது சொந்த நடத்தையால் சரிவை சந்தித்தாக கூறி அதிர வைத்தார். அப்போது பேசிய பாரதி கண்ணன், கார்த்திக்கிடம் ஒரு கதை சொவதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார் , பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் தரமாட்டார் என அவர் மீது அப்போது நிறைய குற்றச்சாட்டு இருந்தன.

அப்போதான் நாங்கள் கார்த்திக்கிடம் சிக்கினோம் கதை சொல்வதற்காக 5 லட்சம் பணத்துடன் கார்த்தி வீட்டிற்கு சென்றோம். கார்த்தி உற்சாகமாக வரவேற்றார். நான் பணத்தை கையில் தொடுவதில்லை அப்பா ஃபோட்டோ முன்னாள் வைத்துவிடுங்கள் என்று கூறினார். கழுத்தில் மாட்டியிருந்த தனது தந்தையின் டாலரை பிடித்துவிட்டு இந்த படம் பெருசா வரும்னு எனக்கு தோனுது அப்பாவோட வைப்ரேஷன் இருக்கு என்றார். பின் அடுத்த வாரம் நான் ஊட்டிக்கு செல்கிறேன் அங்கு வந்து கதை சொல்லுங்கள் என்று என்னிடம் கூறினார்.
இடையில் ஒரு நாள் அழைத்து 5 லட்சம் பணம் கேட்டார். தயாரிப்பாளரிடம் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு நான் ஊட்டிக்கு சென்றேன். கார்த்தி மது அருந்திக்கொண்டு அருந்திக்கொண்டு இருந்தார் . நான் கொண்டு போன 5 லட்சத்தை வாங்கி வைத்துவிட்டு கதை கேட்டார். இந்த கதையில் நிறைய ரத்தம் இருக்கிறது அதனால் கதையை மாற்றலாம் என சொன்னார்.
ஆனால் அதற்குள் தயாரிப்பாளர் கார்த்தியைப் பற்றி விசாரித்துவிட்டு கார்த்தியிடம் கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு வரசொல்லிட்டார். அப்போது அவர் லவ்லி என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போத கார்த்தியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன். கார்த்திக்கு காசு கொடுத்தா வராதுனு இண்டஸ்ட்ரிக்கே தெரியுமே உங்களுக்கு தெரியாதா என்று சர்வ சாதாரணமாக கேட்டார். கார்த்திக் ஒரு மிகப்பெரிய நடிகர் அவருடைய மார்கெட்டை வேற யாரும் கெடுக்கல. அவரேதான் கெடுத்துக்கொண்டார். " இவ்வாறு பாரதி கண்ணன் கிண்டல் தொணியில் கார்த்தியின் வாய்ஸை அப்படியே மிமிக்கிரி செய்து பேசி காட்டினார். இது சமூக ஊடங்களில் அண்மை காலங்களில் அதிகமாக பரவியது. அப்படி பரவிய போதே, கார்த்திக் தற்போது உடல்நிலைசரியில்லாமல் இருக்கிறார் என்றே பலரும் சமூக ஊடகங்களில் கூறி வந்தார்கள்.
அதேநேரம் கார்த்திக் தற்போது உடல் நிலை சரியில்லாத சூழலில் இப்படியான பேச்சுக்கள் அவரை பற்றி வருவது சரியல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதன்பின்னர், படிப்படிப்படியாக கார்த்திக் குறித்த செய்திகள் அதிகமாக வெளியாகின. பலரும் கார்த்திக் பற்றி பேச தொடங்கினார்கள். இந்த சூழலில் கார்த்திக் உடல் நிலை சரியிலை என்றும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் வதந்திகள் பரவியது. இதனை வதந்தி என்று கௌதம் கார்த்திக் விளக்கம் அளித்தார். ஆனாலும் கேட்பதாக இல்லை. அவருக்க உடல் நிலை நன்றாக உள்ளது என்று கார்த்தியே வந்து சொன்னால் தான் நம்புவோம் என்பது போல் வதந்திகளை சிலர் பரப்பி வந்தார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கார்த்திக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் கார்த்திக் கம்பு சுற்றுகிறார். இந்த வீடியோவை தொடர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில், நடிகர் கார்த்திக்கின் பிஆர்ஓ சிங்கரவேன் வதந்தி குறித்து கூறுகையில் சில ஊடகங்கள் பழைய செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகின்றன. அவர் நலமாக இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications