"கேம்" மாறுது! அஸ்திவாரத்திலேயே கை வைத்த எடப்பாடி! அமித்ஷாவிடம் தரும் ரெட் லிஸ்ட்! குறி திமுகவிற்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி கையில் பெரிய "ரெட்" லிஸ்ட் ஒன்றுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் உள்ள முக்கியமான சில தலைகளை தூக்குவதற்கு திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதிமுகவை சேர்ந்த 3 சிட்டிங் எம்எல்ஏக்கள் விரைவில் திமுகவில் ஐக்கியம் ஆக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது அதிமுகவில் இருந்து அதிகாரபூர்வமாக விலகாமல், ஆனால் வெளியில் இருந்து திமுகவிற்கு இவர்கள் 3 பேரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த எம்எல்ஏக்கள் 3 பேரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் என்று கூறப்படுகிறது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது போக இன்னொரு பக்கம் அதிமுக மாஜி அமைச்சர்கள் வரிசையாக ரெய்டுகளில் சிக்கி உள்ளனர். எஸ். வேலுமணி வீட்டில் 3வது முறையாக சமீபத்தில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. இந்த 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது.

வழக்கு

வழக்கு

சபாநாயகராகும் முன் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் வேலுமணிக்கு எதிராக புகார் கொடுத்தார். எல்இடி விளக்குகள் வாங்குவதில் அவர் ஊழல் செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இது போக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது.

வேலுமணி

வேலுமணி

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதுபோக ஏற்கனவே எஸ்.பி வேலுமணி, தங்கமணி, காமராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கினார்கள். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தற்போது இதை பற்றி புகார் பட்டியல் வாசிக்க டெல்லிக்கு சென்று இருக்கிறார். டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி கையில் பெரிய "ரெட்" லிஸ்ட் ஒன்றுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆக்சன் எடுக்கப்பட வேண்டியவர்களுக்கான லிஸ்ட் என்கிறார்கள்.

ரெய்டு

ரெய்டு

இதில் இரண்டு முக்கியமான தகவல்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திமுகவில் உள்ளவர்கள் மீது இருக்கும் புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர் குறித்த விவரங்கள் அடங்கிய லிஸ்டுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்றுள்ளாராம். அதாவது.. நீங்க எங்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையை அனுப்பினீர்கள்.. நாங்கள் சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்ப வைப்போம் பாருங்கள் என்று கூறும் வகையில் எடப்பாடி பழனிசாமி இந்த லிஸ்டை அமித் ஷாவிடம் கொடுக்க போகிறாராம்.

லிஸ்ட்

லிஸ்ட்

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து திமுகவிற்கு தகவல் கசியவிடப்படுகிறது. அதனால் ஓ பன்னீர்செல்வம் மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என்று அவரின் ஆட்கள் பற்றிய லிஸ்டையும் எடப்பாடி கொடுக்க உள்ளாராம். அதாவது திமுக - ஓபிஎஸ் கூட்டு என்பதை அமித் ஷாவிடம் தெரிவிக்கும் திட்டத்தில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க பாஜக சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி இந்த லிஸ்டுடன் சென்றது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

 திமுக

திமுக

ஆனால் திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், அவர் வேண்டுமானால் திமுக மீது புகார் பட்டியலுடன் செல்லட்டும். எங்களுக்கு மடியில் கனம் இருந்தால்தானே பயம் இருக்கும். அதோடு மத்திய அரசுக்கு தெரியாத எந்த விஷயம் எடப்பாடிக்கு தெரிந்து இருக்கும்? இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் தரப்பில் தவறு எதுவும் இல்லை, என்று திமுக தரப்பினர் கூறுகின்றனர். அதேபோல் சொந்த கட்சி பிரச்னையை தீர்க்காமல்.. இப்படி மற்ற கட்சிக்கு எதிராக மத்திய அரசை தூண்டிவிட்டு காரியம் சாதிக்கும் நிலைக்கு அதிமுக போன்ற கட்சி வரலாமா என்று தொண்டர்களே கேட்கும் நிலைக்கு தற்போது அக்கட்சி சென்றுள்ளதாகவும் தொண்டர்கள் விமர்சிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+