விஜய்யின் தவெக பக்கம் போகும் அமமுக? ஊழலற்ற ஆட்சி அமையும்.. பொதுக்குழுவில் டிடிவி தினகரன் சூசகம்!
சென்னை: அமமுக தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி, யார் நண்பர் என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியாது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமையும். இந்த ஆட்சியை ஏற்படுத்த காரணமாக இருக்கப்போவது அமமுகதான். உறுதியாக இந்த முறை அமமுகவினர் அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள் என்று டிடிவி தினரகன் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும், ஊழலற்ற ஆட்சியை உருவாக்க பாடுபடுவோம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த காரணமாக இருக்கப்போவது அமமுகதான். ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என நான் முடிவெடுத்ததால் என்னால் வெற்றி பெற முடியவில்லை.
ஆளும் கட்சி எம்எல்ஏவாக நாம் சட்டமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி, யார் நண்பர் என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் நல்லதற்கு யாருடன் கூட்டணி வைத்தால் நல்லதோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.
கவுரவமான இடங்களைப் பெற்று கூட்டணி அமைப்போம். அமமுகவினர் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களாக சட்டசபைக்கு செல்வோம். நான் யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். நான் கை காட்டுபவரே முதல்வர் ஆவார். கவுரவமான இடம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. 3 ஆயிரம் பேருக்கு மேல் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள். கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
எம்பி, எம்எல்ஏக்களை விட லட்சியம் முக்கியம். அமமுக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும். தெளிந்த நீரோடை போல இருக்கிறோம். நமது உயரம் நமக்கு தெரியும். கடவுளின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி தமிழ்நாட்டில் எடுபடாது. நான் குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு கட்சி நடத்துபவன் அல்ல" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications