சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று பா. ரஞ்சித் சொன்னது! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு ஓரம்கட்டப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: எஞ்சாயி எஞ்சாமி பாடல் மீண்டும் ஒருமுறை டிரெண்டில் வந்துள்ளது. ஆனால் இந்த முறை வேறு ஒரு காரணத்திற்காக. உலக அளவில் கவனம் பெற்ற இந்த பாடல் மூன்றாவது முறையாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Recommended Video

    Enjoy Enjaami Copyrights Issue - Santhosh Narayanan Arivu இடையே தொடரும் சர்ச்சை *TamilNadu

    எஞ்சாயி எஞ்சாமி பாடம் தெருக்குறள் அறிவின் பாடல் வரிகள் மற்றும் குரலில் வெளி வந்து சர்வதேச அளவில் ஹிட் அடித்த சிங்கிள் ஆகும். பாடகி தீயும் இதில் பாடி இருந்தார்.

    சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த பாடல் யூ டியூபில் இதுவரை 42,98,07,117 பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியான நாள் அன்றே சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. ஏ.ஆர் ரகுமான் மாஜா லேபிள் மூலம் இந்த பாடல் வெளியிடப்பட்டது.

    ஒரு வார்த்தைகூட சொல்லல! உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்கலாம்! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு பதிலடிஒரு வார்த்தைகூட சொல்லல! உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்கலாம்! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு பதிலடி

    டிரெண்ட்

    டிரெண்ட்

    ஆப்ரிக்க இசையின் தயக்கத்தோடும், தமிழ் பூர்வ குடிகளின் இசை கருவிகளோடும், அறிவின் வரிகளோடும் வந்த இந்த பாடல் உலகம் முழுக்க கவனம் பெற்றது. முக்கியமாக இந்த பாடல் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கஷ்டங்களை விவரிக்கும் விதமாக அமைந்து இருந்தது. அறிவே இதில் பெண் குரலில் ஒப்பாரி வைத்ததும் கூட கவனம் பெற்றது. இதெல்லாம் இந்த பாடல் உலகம் முழுக்க கவனம் பெற காரணம்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இந்த நிலையில்தான் இந்த பாடல் பல்வேறு விஷயங்களுக்காக சர்ச்சைக்கு உள்ளானது. முதல் விஷயம்.. இந்த பாடலில் தீ பெயர் முதலில் போடப்பட்டு Ft அறிவு என்று வைக்கப்பட்டது. அதாவது தீயின் பாடலில் அறிவு தோன்றுகிறார் என்ற அர்த்தத்தில் இந்த பாடலுக்கு பெயர் வைக்கப்பட்டது பெரிய சர்ச்சையானது. அதோடு யூடியூபில் இப்போது வரை பாடல் வரிகளில் அறிவு பெயர் இல்லை என்பது சர்ச்சையாக உள்ளது.

    இரண்டாவது சர்ச்சை

    இரண்டாவது சர்ச்சை

    இந்த நிலையில்தான் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த பாடல் சர்ச்சையில் சிக்கியது. Rolling Stone என்ற இதழில் தமிழ் கலைஞர்கள் குறித்த கட்டுரையில் அறிவு படத்திற்கு பதிலாக தீ மற்றும் ஷான் வின்சென்ட் பால் என்பவரின் படங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த ஷான் வின்சென்ட் பால் கனடாவை சேர்ந்த ராப் கலைஞர். அறிவு எழுதிய சர்பேட்டா பரம்பரை படத்தின் நீயே ஒளி பாடலில் ராப் பகுதியை இவர் பாடி இருந்தார்.

    கவர் போட்டோ

    கவர் போட்டோ

    அந்த இதழின் கவர் போட்டோவில் அறிவு படம் இடம்பெறாதது பெரிய சர்ச்சையானது. நீயே ஒளி, எஞ்சாயி எஞ்சாமி பாடல் பற்றிய ஒரு கட்டுரையில் அறிவு படம் இடம்பெறாதது எப்படி என்ற கேள்வியை எழுப்பியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பான வெளியான கவர் வர்ஷன் பாடல்களிலும் அறிவு படம் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் டைம்ஸ் ஸ்கோயரில் கொடுக்கப்பட்ட விளம்பரத்திலும் அறிவு படம் பயன்படுத்தப்படவில்லை.

    பா. ரஞ்சித்

    பா. ரஞ்சித்

    இந்த தொடர் நிகழ்வுகளால் கோபம் அடைந்த பா. ரஞ்சித், அறிவை ஏன் ஓரம்கட்டுகிறார்கள். இரண்டு பாடலுக்கும் அவர் தானே வரிகள் எழுதியது. இப்படி அவரின் பங்களிப்பை பொதுவில் வெளியிடாமல் அழிக்க முயல்வது என்ன நியாயம் என்று கேட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையான நிலையில், ஷான் வின்சென்ட் பால் இதற்கு விளக்கம் கொடுத்தார். அதில் அறிவுக்கு எப்போதும் தான் ஆதரவாக இருப்பேன்.

    அறிவு

    அறிவு

    அறிவு பற்றி எனக்கு தெரியும். அவர் கடினமாக இதற்கு பின் உழைத்து உள்ளார். ஆனால் பா. ரஞ்சித் தேவையின்றி இந்த விஷயத்தை பெரிதாக்கி சர்ச்சையாக்கிவிட்டார். இந்த விவகாரத்தில் தேவையின்றி அவர் விமர்சனம் செய்து மீடியாவுக்கு தீனி போட்டுவிட்டார் என்று பா. ரஞ்சித்துடன் மோதும் வகையில் பேசி இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் சந்தோஷ் நாராயணன் இதில் பெரிதாக கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

    சந்தோஷ்

    சந்தோஷ்

    பின்னர் சந்தோஷ் நாராயணன் - பா. ரஞ்சித் கூட்டணி பிரியவும் இதுவே காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் இவர்களின் பிரிவிற்கு வேறு சில விஷயங்களும் வித்திட்டது வேறு வரலாறு. இப்படி இரண்டு முறை ஓரம்கட்டப்பட்ட அறிவு இப்போது மூன்றாவது முறையாக ஓரம்கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் எஞ்ஜாயி எஞ்சாமி' பாடல் மக்கள் முன்னிலையில் பாடப்பட்டது. ஆனால் இதில் பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் மட்டுமே தோன்றினர். அறிவின் ரெக்கார்ட் குரல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    அப்போது அறிவு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அறிவு அப்போது அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் வந்ததால் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அறிவின் சமூக வலைதள போஸ்ட் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் "இசையமைத்து" "எழுதி" , "பாடி" & "நடித்து" வந்த பாடல்தான் எஞ்சாயி எஞ்சாமி. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்ததோடு கஷ்டப்பட்டு கொண்டு வந்த பாடல் இது. இது ஒரு குழு முயற்சி. இது எல்லோரையும் ஒன்றிணைக்கும் பாடல் எனபதால் சந்தேகமில்லை.

    என்ன சொன்னார்?

    என்ன சொன்னார்?

    அதே சமயம் வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்த என் முன்னோர்களின் சரித்திரமோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த அடக்குமுறையின் வடுக்களை கொண்டிருக்கும். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்க முடியாது. ஜெய்பீம். கடைசியில் உண்மை எப்போதும் வெல்லும், என்று அறிவு கூறியுள்ளார். அறிவின் இந்த போஸ்ட் காரணமாக, சென்னை செஸ் ஒலிம்பியாட் விழாவில் அறிவு ஓரம்கட்டப்பட்டாரோ.. நிகழ்ச்சியை நடத்திய விக்னேஷ் சிவன் இயக்குனர் இவரை அழைத்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Is Arivu sidelined? Why really happened behind Enjoy Enjami controversy in Chess Olympiad? எஞ்சாயி எஞ்சாமி பாடல் மீண்டும் ஒருமுறை டிரெண்டில் வந்துள்ளது. ஆனால் இந்த முறை வேறு ஒரு காரணத்திற்காக. உலக அளவில் கவனம் பெற்ற இந்த பாடல் மூன்றாவது முறையாக சர்ச்சையில் சிக்கி உள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X