எடப்பாடி டூ தங்கமணி டூ சண்முகம்! அதிமுகவை உலுக்கும் "சிடிஆர்".. பொன்னையனுக்கு காத்திருக்கும் டெஸ்ட்
சென்னை: பொன்னையன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று அதிமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை சேர்ந்த டாப் தலைகளின் பெயர்கள் இந்த ஆடியோவில் அடிபட்டு இருப்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.
Recommended Video
அதிமுகவில் பொதுக்குழு பிரச்சனையே இன்னும் தீரவில்லை. அதற்குள் ஆடியோ பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது. நேற்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ நேற்று வெளியானது.
பொன்னையன் பேசியதாக சொல்லப்படும் இந்த ஆடியோவில் 3 முக்கியமான விஷயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன.

எடப்பாடி பற்றி புகார்
முதல் விஷயம் - அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என்று பொன்னையன் பேசியதாக ஆடியோவில் பதிவாகி உள்ளது.. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை.9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, இதனால் எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வேலுமணி, தங்கமணி போன்றார்தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள், என்று பொன்னையன் கூறுவதாக ஆடியோ பதிவாகி இருந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி முதுகில் குத்திவிட்டனர். எடப்பாடிக்கு வேறு வழியே இல்லை, என்று குறிப்பிடுவதாக ஆடியோ பதிவாகி உள்ளது.

சிவி சண்முகம்
இரண்டாவது விஷயம் - சிவி சண்முகம் பற்றியும் பொன்னையன் பேசியதாக ஆடியோவில் பதிவாகி உள்ளது. அதில், யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். படையாச்சி எம்எல்ஏக்கள் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அவர் பகலில் கூட குடிக்க கூடியவர். கொங்கு மண்டபத்தில் கூட எடப்பாடி கையில் எம்எல்ஏக்கள் இல்லை, என்றும் பொன்னையன் பேசுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது, என்று குறிப்பிடுவதாக ஆடியோ பதிவாகி உள்ளது.

தங்கமணி
மூன்றாவது விஷயம் - தங்கமணி பற்றியும் பொன்னையன் பேசியதாக ஆடியோவில் பதிவாகி உள்ளது. அதில், தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலின் பக்கம் செல்ல தொடங்கிவிட்டார். கேபி முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திக்கொண்டார். இப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் ஆளும் கட்சியை நம்பி இருக்கிறார்கள். ஸ்டாலின் தயவு வேண்டும் என்பதால் திமுகவை இவர்கள் திட்டுவது இல்லை, என்று குறிப்பிடுவதாக ஆடியோ பதிவாகி உள்ளது.

மூன்று விவகாரங்கள்
இந்த மூன்று விவகாரங்கள் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் ஆடியோவில் பேசியது தான் இல்லை என்று ஒரு பக்கம் பொன்னையன் தெரிவித்துள்ளார். தனக்கும் ஆடியோவிற்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார். நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள், என்று அவர் கூறியுள்ளார்.

கோலப்பன்
ஆனால் பொன்னையனிடம் பேசியதாக சொல்லப்படும் நாஞ்சில் கோலப்பன் இதை மறுத்துள்ளார். அந்த ஆடியோ உண்மைதான் என்று அவர் கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது பொன்னையனுக்கு சிக்கலாகி உள்ளது. இந்த ஆடியோவில் இருப்பது பொன்னையன் இல்லை என்றால் அவர் கண்டிப்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கலாம். அதே சமயம் கோலப்பனும் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம் பிரிவில் பொதுவாக சிடிஆர் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது Call Detail Record. இதன் மூலம் பொன்னையன் - கோலப்பன் உண்மையில் பேசினார்களா என்பது புலனாகிவிடும். ஜூலை 9ம் தேதி இரவு 9.59 மணிக்கு பொன்னையன் என்னுடன் பேசினார் என்று கோலப்பன் தெரிவித்துள்ளார். போனில் தகவலை அழித்தாலும் சிடிஆரில் அழிக்க முடியாது.

புகார்
ஆனால் இதற்கு யாரா வது அதிகாரபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். சிடிஆர் விவரங்களை பார்க்கும் பட்சத்தில் இதை கண்டுபிடித்துவிட முடியும். இரண்டு தரப்பில் ஒருவர் சைபர் கிரைம் பிரிவிற்கு சென்றாலும்.. உண்மை வெளிவந்துவிடும். எனவே வரும் நாட்களில் இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவை உலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications