சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இதுதான் ஒரே வழி".. ராகுல் டிராவிட்டை நெருக்கியதா பிசிசிஐ.. பயிற்சியாளர் தேர்வில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்க போவதாக நிறைய தகவல்கள் உலா வருகின்றன. இதில் பிசிசிஐ கண்டிப்புடன் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி இந்த உலகக் கோப்பை டி 20 தொடரில் இருந்து வெளியேற இருக்கிறார். இந்த நிலையில்தான் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதற்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில் யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில்

ஆனாலும் பிசிசிஐ இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளர்களை நியமிக்கவே விருப்பம் தெரிவித்து வருகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரும் அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக்க பிசிசிஐ முயன்றது.

ராகுல் டிராவிட் ஆசை

ராகுல் டிராவிட் ஆசை

இந்த நிலையில் ராகுலிடம் இது குறித்து கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சீனியர் அணியை பயிற்சி செய்ய விருப்பம் இல்லை என்று ராகுல் டிராவிட் மறுத்ததாக கூறப்படுகிறது. நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்கிறேன். சீனியர் அணியை பயிற்சி அளிக்க விருப்பம் இல்லை என்று ராகுல் டிராவிட் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

முடியாது

முடியாது

ஆனால் பிசிசிஐ இவரின் பதிலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் இந்திய அண்டர் 19ம் தேதியின் பயிற்சியாளராக நீடிக்க முடியாது. அவர் பொறுப்பு ஏற்கனவே அண்டர் 19ல் நீட்டிக்கப்பட்டுவிட்டது. மேலும் இதை நீட்டிக்க முடியாது.

வேறு நபர்கள் இல்லை

வேறு நபர்கள் இல்லை


இந்திய சீனியர் அணியை வழிநடத்த வேறு பயிற்சியாளர்கள் இல்லை. நீங்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியதாக தெரிகிறது. அதோடு டிராவிட்டிடம் பிசிசிஐ கொஞ்சம் கடுமையாக இது குறித்து பேசியதாகவும் தெரிகிறது. நீங்கள் கண்டிப்பாக இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளர் ஆக வேண்டும்.. ரவி சாஸ்திரிக்கு பின் நீங்கள்தான் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

Recommended Video

    Rahul Tripathi-க்கு ஆறுதல்.. KKR-க்கு பாராட்டு.. இதான் சார் Dhoni
    சம்மதம்

    சம்மதம்

    முதலில் நியூசிலாந்து தொடருக்கு மட்டும் பயிற்சியாளராக டெஸ்ட் ரன் செய்ய ராகுல் முடிவு செய்துள்ளார். இதை முதலில் பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அதன்பின் பிசிசிஐ ராகுல் டிராவிட்டிற்கு நெருக்கடி கொடுத்ததாகவும், 2023 உலகக் கோப்பை வரை நீங்கள் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.

    அழுத்தம்

    அழுத்தம்

    நீங்கள் கண்டிப்பாக இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளர் ஆக வேண்டும் இல்லையென்றால் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் நீடிக்க முடியாது. இந்திய அண்டர் 19 பயிற்சியாளராகவும் நீடிக்க முடியாது. இதுதான் ஒரே வழி என்று பிசிசிஐ தரப்பு டிராவிட்டிற்கு கண்டிப்புடன் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதை ராகுல் டிராவிட் கடைசியில் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

     கடைசியில் சொன்னது என்ன?

    கடைசியில் சொன்னது என்ன?

    ஆனாலும் இதில் பல குழப்பமான செய்திகள் வெளியாவதால் ராகுல் டிராவிட் உண்மையில் இந்த பயிற்சியாளர் ஆபரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. ராகுல் டிராவிட் தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள பயிற்சியாளர் விண்ணப்பத்திற்கு முறையாக அதிகாரபூர்வமாக விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பிசிசிஐ இவரை அதிகாரபூர்வமாக பயிற்சியாளராக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Is BCCI pressuring former player Rahul Dravid to be the coach of India Senior Team?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X