பாஜகவுக்கு பால் ஊற்றி வளர்க்கும் அதிமுக.. கமாண்டிங் ஆபீசர் யார்? அதுதான் அப்பட்டமாக தெரியுதே! பரபர!
சென்னை: தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா கட்சி கட்சிக்குள் மட்டும் இல்லாமல், கூட்டணி குறித்தும் முடிவெடுக்கும் நிலைக்கே வலுப்பெற்று வருகிறதா என்ற கேள்வி இப்போது தீவிரமாக எழுந்துள்ளது. பாஜகவின் சமீப கால நடவடிக்கைகளும், பேச்சுகளு அப்படித் தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஒரு காலத்தில் போட்டியிட வேட்பாளர்களுக்காக அலைந்த பாஜக, இப்போது தமிழ்நாட்டில் 'டபுள் இஞ்சின்' அரசு என பேசத்தொடங்கியிருப்பதே பெரிய மாற்றம் தான் என்கின்றனர்.
மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து நடத்தப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டம், இதன் தெளிவான உதாரணமாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் கூட்டத்துக்கு முன்பே தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.
அதோடு மட்டுமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து பேசினார். இதன் மூலம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை அவர் மறு உறுதி செய்ததோடு, அனைவரையும் பிரதமரின் பிரசார மேடையிலும் தோன்றச் செய்தார்.

2026 சட்டப்பேரவை தேர்தல்
முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பிடிவாதமாக இருந்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனையும் பேச்சுவார்த்தை மூலம் கூட்டணிக்குள் கொண்டு வந்ததில் பியூஷ் கோயலின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போது பழைய கூட்டணிக் கட்சிகளில் மீதமிருப்பது தேமுதிகவும், ஓ.பன்னீர்செல்வமும் மட்டுமே. தேமுதிக தரப்பில் யாரும் பேசவில்லை என பிரேமலதா கூறினாலும், ஓ.மி த.வெ.க.வுடன் இணையலாம் என்ற யூகங்களும் நிலவுகின்றன.
தமிழக அரசியல்
தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று கடந்த ஆண்டு அமித் ஷா அறிவித்திருந்தாலும், தற்போது தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது பியூஷ் கோயல்தான். இதற்குப் பிறகும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் அமையப் போவது அதிமுக ஆட்சியா, அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியா என்ற கேள்வி இன்னமும் தெளிவில்லாமலேயே உள்ளது.
என்.டி.ஏ கூட்டணி
ஏனெனில், பாஜக உயர்மட்டத் தலைவர்கள் யாரும் வெளிப்படையாக அதிமுக ஆட்சி அமைக்கும் அல்லது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று சொல்லாமல் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி வீட்டில் காலை உணவு முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட, அதிமுக ஆட்சி அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்து குறிப்பிடவில்லை. மாநில பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை போன்றோர் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என கூறுகின்றனர்.
இரட்டை என்ஜின் அரசு
மதுராந்தகம் மேடையில் பிரதமர் மோடியும், "தமிழ்நாடு பாரதிய ஜனதா - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விரும்புகிறது", "இரட்டை என்ஜின் அரசு உறுதி" என்றே குறிப்பிட்டார். அதிமுக ஆட்சி என்று அவர் சொல்லவில்லை. அதே மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மட்டுமே, 210 இடங்களில் கூட்டணி வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார். இந்த வார்த்தைகளிலேயே, கூட்டணிக்குள் உள்ள அதிகாரச் சமநிலை எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரட்டை என்ஜின் அரசு என்றால், தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் பாஜகவும் இருக்கும் அரசுகள்தான் இதுவரை நாட்டில் உருவாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி
அப்படியானால், தமிழ்நாட்டில் அந்த இரட்டை என்ஜினில் மாநில என்ஜின் யார்? அதிமுகவா, பாஜகவா? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. கூட்டணியை ஒருங்கிணைப்பதில், கட்சிகளை இணைப்பதில், முடிவுகளை தங்கள் வசமாக நகர்த்துவதில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் மிக வலுவாக செயல்படுகிறது. பிரேமலதா, பன்னீர்செல்வம் விவகாரங்கள்கூட விட்டு பிடிக்கும் உத்தியாக இருக்கலாம் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கூட்டணி வென்றால் முதல்வர் யார்? என்ற கேள்வியை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் அளவுக்கு பாஜக செல்வாக்கு உயர்ந்துள்ளது என்பதே தற்போதைய நிலை.
நடிகர் விஜய்
இதற்கு மாறாக, நீண்ட காலமாக வலுவாகக் காணப்பட்ட திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தெளிவற்ற செயல்பாடுகளால் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்தான் அடுத்த முதல்வர் என முடிவு செய்தவர்கள் போல சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது, கூட்டணிக்குள் தேவையற்ற சந்தேகங்களை உருவாக்குகிறது. பிகார் தேர்தலில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் மீண்டும் நிகழுமா என்ற அச்சமும் எழுகிறது. இந்த சூழலில், வழக்கு
தேசிய ஜனநாயகக் கூட்டணி
விசாரணை, படம் ரிலீஸ் என அலைந்துகொண்டிருக்கும் விஜய்யின் தவெக எந்த திசையில் செல்லப்போகிறது என்ற கேள்விக்கும் இன்னும் பதில் இல்லை. பிரதமர் மோடியின் சமீபத்திய பேச்சுகள் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகச் சொல்வது போல கடுமையாக இருந்தன. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால், அந்த இலக்கை அடைந்தபின், முதல்வர் யார் என்ற கேள்விக்கு அவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்பது தான் இப்போது அரசியல் சஸ்பென்ஸ்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications