புஸ்சி ஆனந்த்துக்கு சர்ப்ரைஸ் போஸ்டிங் தரப்போகும் தவெக விஜய்.. துணை முதலமைச்சர் யார் தெரியுமா?
சென்னை: நாஞ்சில் சம்பத், ஒரு தமிழ் அருவி.. எந்த கட்சியில் இருக்கிறாரோ, அந்த கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.. அந்தவகையில், அவரது கருத்துக்களில் முரண்கள் இருந்தாலும், அவரது பேச்சு தொண்டர்களால் ரசிக்கப்படும்.. விஜய்க்கு அடுத்தபடியாக, நாஞ்சில் சம்பத் பேச்சு தவெகவில் கவனம் பெறும்" என்று வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், ஆரம்பத்தில் சாலைப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, விஜய் ஒரு பொதுமேடையில் மக்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறார்.. விஜய்யின் உரையில், புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
{image-tvksdwsz-1760003926-1-jpg-1765354432783_1765354341596-600x338.jpg tamil.oneindia.com
புதுச்சேரி ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் நெருங்கிய நட்பு வைத்துள்ளார்.. இதைத்தவிர, புதுச்சேரியில் ஃபிலிம் சிட்டி அமைப்பது மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கட்டுவது போன்ற நீண்ட நாள் ஆசைகள் விஜய்க்கு உள்ளதால், அதுகுறித்து ரங்கசாமியுடன் விவாதித்துள்ளார்.. இதனை அரசியலாக அல்லாமல், பிசினஸ் என்ற பார்வையிலும் அணுகலாம்.
விஜய் தன் பேச்சில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் ரங்கசாமியை விமர்சிக்கவில்லை. மாறாக, மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காததை குறிப்பிட்டு, கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டுமே விமர்சித்தார்.. விஜய்யின் பேச்சுக்குப் பிறகு, "NR காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணி" என்று போஸ்டர்கள் உடனடியாக ஒட்டப்பட்டன. அந்தவகையில், ரங்கசாமியும் விஜய்யும் இணையும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது..
புஸ்ஸி ஆனந்த் - துணை முதல்வர்
விஜய்யின் அரசியல் நகர்வுகள், அவரது நம்பிக்கைக்குரியவரான புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி அரசியலில் ஒரு பெரிய 'வெயிட்டான' இடத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருப்பதாக தெரிகிறது.. அதாவது என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தால், புஸ்ஸி ஆனந்துக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது..
புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய பலத்தை காட்டுவதற்காகவே இப்படியான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, விஜய்யை அழைத்து சென்றிருக்கிறார்.. ஏதோ ஒருவகையில் தவெக பிசியாக இயங்கி வருகிறது..மொத்தத்தில் கரூர் சம்பத்தில் இருந்து வெளியேறி வரவேண்டும் என்ற கட்டாயம் தவெகவுக்கு உள்ளதால், முதல்முறையாக இப்போது ஓபன் கிரவுண்டில் நடந்துள்ளது, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது..
மாநில அந்தஸ்து
அதேசமயம், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியையோ, முதல்வர் ரங்கசாமியையோ விமர்சிக்காமல், கூட்டணியில் இருக்கும் பாஜகவை மட்டும் விஜய் விமர்சித்துள்ளார்.. புதுச்சேரிக்கு நீண்ட காலமாக மாநில அந்தஸ்து கேட்டு வரும் கோரிக்கையை பாஜக இதுவரை நிறைவேற்றவில்லை.. இது உண்மைதானே? இதைத்தானே விஜய் சொல்கிறார்.
விஜய் புதுச்சேரியில் பேசியதை, தமிழகத்துடன் பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் பாண்டிச்சேரியில் ஒரு ஒழுங்குடன், கட்டுக்கோப்புடன் கூட்டம் நடத்தி ஆச்சரியத்தை தந்துள்ளது தவெக.
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யின் அரசியல் பலத்தையும் கட்டுப்பாட்டையும் நிரூபிக்க, செங்கோட்டையன் தன்னுடைய சொந்த ஊரான ஈரோட்டில் பிரம்மாண்டமான கூட்டம் நடத்த போகிறார்..
செங்கோட்டையன் தவெகவுக்கு வந்த பிறகு, செய்தியாளர் கூட்டம் நடத்தியது, தவெகவுக்கு கண்ணியத்தை அதிகரிக்க செய்துள்ளது.. நாஞ்சில் சம்பத், ஒரு தமிழ் அருவி.. எந்த கட்சியில் இருக்கிறாரோ, அந்த கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.. அந்தவகையில், அவரது கருத்துக்களில் முரண்கள் இருந்தாலும், அவரது பேச்சு தொண்டர்களால் ரசிக்கப்படும்.. விஜய்க்கு அடுத்தபடியாக, நாஞ்சில் சம்பத் பேச்சு தவெகவில் கவனம் பெறும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications