பிடிஆர் பதவிக்கு ஆபத்து இல்லை.. அந்த 1 மணி நேரம்.. ஸ்டாலினிடம் பேசியது என்ன? மீட்டிங்கில் ட்விஸ்ட்!
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினார். இந்த சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அரசியலில் தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

முக்கியமாக திமுகவில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை விமர்சனம் செய்யும் விதமாக இந்த ஆடியோ இருந்ததாக புகார் வைக்கப்பட்டது.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.
சந்திப்பு: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். ஸ்டாலினை சந்தித்த பி.டி.ஆர். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தயாராக எடுத்துச் சென்ற கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது, ஸ்டாலினாக, ராஜினாமா செய்யுங்கள் என சொல்வதற்கு முன்பு, நாமே ராஜினாமா செய்திடலாம் என்ற முடிவை எடுத்து ராஜினாமா கடிதத்தை எடுத்துச் சென்றுள்ளார் பி.டி.ஆர். அதனை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, அதனை மீண்டும் பி.டி.ஆரிடமே கொடுத்துவிட்டார் ஸ்டாலின். அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இதற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் பிடிஆர் நேற்று பேசி இருக்கிறார்.
சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீள்வதற்காகத்தான் இந்த ராஜினாமா கடிதம். என்னால் உங்களுக்கும் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் உருவாவதை ஏற்கமாட்டேன். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு எனக்கு தண்டனை கொடுங்கள், என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
பிரன்ட்லைன்: இது தொடர்பாக ஆங்கில ஊடகமான பிரன்ட்லைன் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், கட்சிக்குள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு திமுக அரசு நிதியமைச்சர் பி.டி.ஆரின் அமைச்சர் பதவியை நீக்கவோ அல்லது அவரை மாற்றவோ கூடாது என்று முடிவு செய்துள்ளது, என்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதாவது அவர் நிதி அமைச்சராக தொடரட்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்திலும் இதை பற்றி பேசப்படும், இதில் இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் பிடிஆரின் பதவிக்கு இனியும் ஆபத்து எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.

விளக்கம்: முன்னதாக இரண்டாவதாக வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கி இருந்தார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோக்களை வெளியிட்டு பிடிஆர் அளித்துள்ள விளக்கத்தில், எனது இந்த விளக்கம் 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep fake போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன்.
உதாரணகளுக்கான இணைப்புகள்:
1) Reality Check: Deepfake Videos In Delhi Elections?
2) It's Getting Harder to Spot a Deep Fake Video 3) SASSY JUSTICE - Official White House Address | Deep Fake a...
இத்தகைய உண்மை போன்று
தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால், ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம் - இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும்.
இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.
அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்?
அதேபோன்று, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?
நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள்.
எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications