விஜய் vs வைஷ்ணவி! இப்போதான் களம் சூடு பிடிக்குது! விஜய் தொகுதியில் வைஷ்ணவியை களமிறக்க திமுக திட்டம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான விவாதங்கள் கடந்த சில நாட்களாகவே நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் திமுகவில் சமீபத்தில் இணைந்த வைஷ்ணவி விஜய் போட்டியிடும் தொகுதியில் களமிறக்கப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவாதங்களும் திமுக தரப்பில் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மீட்டிங்கில் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் போட்டியிட சாதகமான தொகுதியை சர்வே எடுக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். தற்போதைய நிலவரப்படி மதுரை அல்லது நாகப்பட்டினத்தில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தருமபுரியில் போட்டியிடுவது பற்றியும் அவர் ஆலோசனை செய்துள்ளாராம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாக தருமபுரி மாவட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் போட்டியிடும் அதே தொகுதி
இந்த நிலையில்தான் திமுகவில் சமீபத்தில் இணைந்த வைஷ்ணவி விஜய் போட்டியிடும் தொகுதியில் களமிறக்கப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது விஜய் எங்கே களமிறக்கப்படுவாரோ அதே தொகுதியில் இவரை களமிறக்க திமுக நினைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த வைஷ்ணவி சமீபத்தில் திமுகவில் இணைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லை, கட்சிக்காக பணியாற்றியவர்களுக்கு மதிப்பு இல்லை, நீண்ட காலம் கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு மதிப்பு இல்லை, முக்கியமாக பெண்களை மதிப்பதே இல்லை என்றெல்லாம் கடுமையான புகார்களை வைத்து வைஷ்ணவி வெளியே வந்தார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாகவே வைஷ்ணவியை வைத்தே திமுக விஜய்க்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. விஜய் இதுவரை வெறும் அறிக்கை மட்டும் தானே வெளியிடுகிறார். அப்போது விஜய்க்கு அதே ஸ்டைலில் பதிலடி தருவோம் என்று வைஷ்ணவி களமிறக்கப்பட்டு உள்ளார். அவரும் நறுக்கென்று விஜயின் அறிக்கை ஒவ்வொன்றிலும் குறை கண்டுபிடித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்.

திமுகவினர் பலரும் இவருக்கு தீவிரமாக ஆதரவு பதிவுகளை செய்து வருகின்றனர். இந்தப் பொண்ண எதுக்கு சேத்தாங்கன்னு நினைச்சேன். சினிமாவில்தான் விஜய் ஹீரோ, அரசியலில் கோமாளி என்பதால், விஜய் போல் அல்லாமல், சொந்தமாக எழுதத்தெரிந்த, பேசத்தெரிந்த இந்த சின்னப்பெண்ணே அவரை எதிர்க்கப் போதும் என நினைத்திருக்கிறார்கள். விஜய்யின் முன்னாள் அண்ணன் சீமான் சொல்வதுபோல் "தனக்கு நிகரான ஒரு எதிரியை விஜய் இப்போதுதான் சந்திக்கிறார்., என்று டான் அசோக் வைஷ்ணவி பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல் கதறு கதறுனு ட்வீட் போட்டவனுக கூட்டத்துல இருந்தே ஒரு ஆள கூட்டி வந்து அவனுகள கதற விட்ருக்கு கழகம், என்று நெட்டிசன் இன்னொருவர் போஸ்ட் செய்துள்ளார். வெற்று அறிக்கைகளையும், சங்கித்தனமான கதறல்களையும், அரசியல் தற்குறிகளையும் சமாளிக்க புதுசா கழகத்திலே இணைந்து இருக்கிற இவரை மாதிரி கடைக்கோடி தொண்டன் போதும்.

நான்கூட ஏன்டா இந்த தவெக புள்ளையலாம் கட்சில சேக்குறாங்ஙேனு யோசிச்சேன்..ஆனா நம்ம செந்தில் பாலாஜி அண்ணா வேற ப்ளானோட களத்துல இறக்கி விட்ருக்காருனு நல்லா தெரியுது.. என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications