பாஜகவின் வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாமல் இருக்க என்ன காரணம்.. திமுகவிற்கு அசுர பலம் உள்ளதா?
சென்னை: பாஜகவின் வியூகம் தமிழ்நாட்டில் இதுவரையில் எடுபடாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். திமுகவின் அசுர பலத்தால் பாஜகவின் வியூகம் எடுபடவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணமல்ல.. இங்கே மொழி, இன அரசியல் மிக அதிகம். அதேபோல் சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு, கலச்சார ரீதியாகவும் தனித்துவமாக இருக்கிறது. காங்கிரஸ், பாஜகவை உள்ளிட்ட தேசிய கட்சிகளை நிராகரிக்க என்ன காரணம். குறிப்பாக பாஜகவிற்கு என்ன சிக்கல் என்பதை பார்ப்போம்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், நாட்டின் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி , ஒருமுறை நாடாளுமன்றத்தில் பாஜகவை விமர்சிக்கும் போது, உங்களால் ஒரு காலத்திலும் தமிழ்நாட்டில் வெற்றி பெறவே முடியாது என்று சவாலேவிட்டார். அது அப்போது பெரிய அளவில் பேசுபொருளானது. ஏனெனில் தமிழ்நாட்டில் என்றைக்குமே தனியாக நின்று பாஜக வெற்றி பெற்றதே கிடையாது.

பாஜகவை நிராகரிக்க காரணம்
அதிமுக, உடன் சேர்ந்து தான் பாஜக வென்றது. அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தான் பாஜக வென்றது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வலுவாக மாறிவிட்ட பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் தடுமாறுவதற்கு காரணம்.. திமுக மட்டுமே அல்ல.. இங்குள்ள அரசியல் பழக்கமே சுத்தமாக வேறு.. தமிழ்நாட்டின் கலாச்சாரம், மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகியவை பாஜகவின் தேசிய அளவிலான வியூகத்தை நிராகரிக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.
திராவிடக் கொள்கைகளின் வலுவான பிணைப்பு
தமிழக அரசியல் நிலப்பரப்பை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை மாறி மாறி ஆண்டு வருகின்றன. இக்கட்சிகளின் கொள்கைகள் சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. என்ன தான் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்தாலும், இந்த மூன்று கொள்கையில் ஒன்றை வைக்கக்கூட ஒப்புக் கொள்ளாது. அதிலும் இந்தியை மூன்றாவது மொழியாகவே ஏற்கவே ஏற்காது.
பாஜகவின் சித்தாந்தம் குறித்த புரிதலும் இங்கு வேறாக இருக்கும். திராவிடக் கொள்கைகளுக்கு நேரெதிராக இருக்கும் தேசியவாத, இந்துத்துவ மற்றும் இந்தி மொழி திணிப்பு குறித்த பாஜகவின் கொள்கைகளைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் இதுவரையில் ஏற்கவில்லை..
இந்தி மொழி
அதேபோல் இந்தியைத் தேசிய மொழியாக முன்னிறுத்தும் பாஜகவின் நிலைப்பாடு, ஆழமான இந்தி எதிர்ப்புக் கலாச்சாரம் நிலவும் தமிழ்நாட்டில் எடுபடவே இல்லை.. இதுவே தமிழர்கள் தனி அடையாளமாக பார்க்கப்பட காரணமாக இருக்கிறது. கர்நாடகாவின் பெங்களூரில் அல்லது டெல்லியிலோ அல்லது மும்பையிலோ அந்தந்த மொழிகளை கற்காமல் வாழ்ந்துவிடாலாம். ஆனால் மற்ற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் தமிழை கற்காமல் வாழவே முடியாத நிலை தான் இருக்கிறது. தமிழ் தெரியாமல் வந்தாலும் ஓராண்டில் தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிடுவார்கள்.
மாநில சுயாட்சி
அடுத்ததாக மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசின் தலையீட்டு அதிகரிப்பதாக இங்குள்ள மக்கள் அதிகம் கருதுகிறார்கள்.காங்கிரஸ் காலத்திலும் சரி இப்போது பாஜக ஆட்சியிலும் சரி, மாநில சுயாட்சி விவகாரம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தலையீடு இருப்பத மாநில உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.
கூட்டணி பலவீனம்
அதிமுக போன்ற வலுவான கூட்டணிக் கட்சிகள் இல்லாதபோது, பாஜக தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. வலுவான பிராந்தியக் கட்சியின் ஆதரவு இல்லாமல், வாக்கு வங்கியை பாஜகவால் அதிகரிக்க முடியாத நிலை இதுவரை இருந்து வந்தது. ஆனால் 2024ல் முதல் முறையாக அந்த நிலை மாறி உள்ளது. பல தொகுதிகளில் நல்ல வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலை பொறுத்தவரை பாஜக தோற்றாலும் வலுவாக வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்டியது.
வலுவான மாநில தலைவர்
பாஜகவில் செல்வாக்குமிக்க, மக்கள் மத்தியில் ஆழமான வேரூன்றிய, மாநில அளவிலான நம்பகமான தலைமையை அவர்கள் உருவாக்க வேண்டும். எடியூரப்பா போல் வலுவான மாநில தலைவர் தமிழ்நாட்டில் உருவாக பாஜக தேசிய தலைமை அனுமதிக்க வேண்டும். அப்படி உருவானால் தான் பாஜக இங்கு வளர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
சிறுபான்மை மக்களின் ஆதரவு
அதேபோல் சிறுபான்மையினர் ஆதரவின்மை முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் கொள்கைகள் காரணமாக, தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் (முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) ஆதரவு அவர்களுக்குக் கிடைப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.அதேபோல் சமூக நீதிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பட்டியலின மக்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினரின் ஒரு பெரிய பிரிவினர் பாஜகவின் இந்துத்துவ அரசியலிலிருந்து விலகி நிற்பதும் காரணமாக இருக்கிறது.
பாஜகவின் பி டீம்
தேர்தல் வெற்றியை மையமாகக் கொண்ட புதிய வியூகங்களான இந்து மக்களை ஒருங்கிணைப்பது, திமுகவை மற்றும் திராவிட அரசியலை கடுமையாக விமர்சிப்பது போன்றவை பொதுமக்களின் வாக்குகளாக பெரிய அளவில் மாறவில்லை.. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறும் போது, பாஜகவை சேர்த்துக் கொண்டதால்,சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை என்று நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தார். திமுகவுமே பாஜக உள்ளே வந்துவிடும் என்று அரசியலை முன்னெடுத்தே 2021லும் சரி, 2024 தேர்தலிலும் சரி வெற்றி பெற்றது. யாராவது ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவின் பி டீம் என்று சொல்லி அவர்களை அந்த பக்கம் திருப்புவதில் திமுக அரசியல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.
திராவிட சித்தாந்தம்
பாஜக வியூகம் வெற்றி பெற வேண்டும் என்றால், இந்தித் திணிப்பு என்ற பிம்பத்தை முழுமையாகக் கைவிட்டு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரலாம். அதேபோல் சமூக நீதி மற்றும் திராவிடக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, திராவிடக் கட்சிகளின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை மட்டுமே விமர்சிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். அதேபோல் தேசியத் தலைவர்களை மட்டும் நம்பியிராமல், தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, வலுவான, மக்கள் கவர்ச்சி கொண்ட ஒரு பிராந்தியத் தலைவரை உருவாக்க வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி, உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் உதவிகளை, மாநில அரசின் பங்கு இல்லாமல், நேரடியாகவும் ஆக்ரோஷமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.
திமுக அதிமுக இல்லாமல் மாற்று
திமுக அல்லது அதிமுகவின் நிழலில் இல்லாமல், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு ஒரு மாற்று என்ற வலுவான பிம்பத்தை பாஜக ஏற்படுத்த வேண்டும். வெறும் சாதி அடிப்படையிலான வாக்குகளை இலக்காகக் கொள்ளாமல், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான சமூகத் திட்டங்களை முன்னெடுத்து, ஆதரவை பாஜக அதிகரிக்க வேண்டும். அதேபோல் பாரம்பரிய அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற புதிய தலைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகக் கையாள வேண்டியதிருக்கும்.
உள்ளூர் மட்டத்தில் வளர்ச்சி
வடமாநிலங்களில் உள்ளது போல். உள்ளூர் மட்டத்தில், கிராமங்கள் மற்றும் பூத் கமிட்டிகளில் கட்சி அமைப்பை மிகவும் வலுப்படுத்த வேண்டும். வெறும் தலைவர்களின் பிரசாரத்தை நம்பாமல், சாதாரணத் தொண்டர்கள் மூலம் மக்களைச் சந்திக்கும் வேலையை பாஜக தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications