4 வருஷம் விட்டேனே.. இப்படி பண்ணிட்டீங்களே.. பாதுகாப்பு வேண்டாம்.. போங்க! விரக்தியில் பேசிய எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல், விவாதங்கள் குறித்து ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேசிய அவர், ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் வெற்றி உறுதி. அவரின் ஆதரவாளர்கள் அதை அதிகம் நம்புகின்றனர். அவருக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். அந்த அடிப்படையில் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். அங்கே இருக்கும் கோவில்களில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். குரு பெயர்ச்சிக்கான கோவில்கள் தொடங்கி எல்லா கோவில்களுக்கும் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று வருகிறார். ஏற்கனவே களப்பணியாற்றிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

Is Edappadi Palanisamy angry with AIADMK leaders and What does he say in the party meetings

அவர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து வருகிறார். அவர் தெய்வ வழிபாட்டிற்காக சென்று கொண்டு இருக்கிறார். அதே சமயம் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தேர்தலுக்கு பின் நாங்கள் நிர்வாகிகளிடம் பேசிய போது இவர் தேவரின் தலைவராக இருக்கிறார். தேவருக்கான தலைவர் நீண்ட காலத்திற்கு பின் தோன்றி உள்ளார். அவர் எங்களை தேடி வந்துள்ளார். ராமநாதபுரத்தில் மக்களை நாடி வந்துள்ளார்.

அங்கே வாக்களித்த பலர் இரண்டாம் இவி எந்திரத்தைதான் தேடி தேடி சென்றுள்ளனர். அங்குதான் ஓ பன்னீர்செல்வம் பெயர் இருந்தது. அப்படி இருக்க அவருக்கே இடம் கிடைக்கும் . நவாஸ் கனிக்கு கடந்த முறை சென்ற வாக்குகள் கூட இந்த முறை ஓ பன்னீர்செல்வத்திற்கு கண்டிப்பாக செல்லும். திமுகவில் நிர்வாகிகள் பலர் முழுமையாக பணிகளை செய்யவில்லை . எதிரே அதிமுக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை.

அதிமுக நிர்வாகிகள் பெரிதாக ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக பணி செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறுவார் என்று கூறுகிறேன்.

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அரசு பாதுகாப்பை துறந்து கேரளா சென்றார். வெளியே சொல்லாமல் .. பாதுகாப்பு வீரர்களை தவிர்த்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்படி செய்திருக்க கூடாது. எடப்பாடி இப்படி ரகசியமாக பயணம் செய்திருக்க கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பிரச்சனை ஏற்படும். இதெல்லாம் சிக்கல். அவர் உண்மையில் எதற்கு போனார் என்று தெரியவில்லை.

தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார். விரக்தியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்துள்ளார் . கையறு நிலையில் இருந்துள்ளார். உங்களை எல்லாம் 4 வருடம் சம்பாதிக்க விட்டேன். ஆனால் நீங்கள் தேர்தலில் செலவே செய்யவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள்.

ஏன் தேர்தல் பணிகளை செய்யவில்லை. பூத் கமிட்டி அளவில் கூட பணிகளை செய்யவில்லையே ஏன்? நான் நியமித்த பொறுப்பாளர்கள் கூட சரியாக பணிகளை செய்யவில்லை. பூத் அளவில் வேலை பார்த்தவர்கள் கூட சரியாக பணிகளை செய்யவில்லை. பலர் பாதியில் பூத் கமிட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர் விரக்தியில் பேசி இருக்கிறார். பலர் கைவிட்டு விட்டார்கள் என்று புலம்பி இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் பேசி இருக்கிறார்., என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+