எடப்பாடி சம்பவம் பண்ணிட்டாரே! முடிவடையும் நிலையில் அதிமுக கூட்டணி பேச்சு! சர்ப்ரைஸாக வந்த 2 கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையும் நிலைக்கு வந்து இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை. அது அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

Is Edappadi Palanisamy finalizing the big AIADMK alliance with some new parties?

எங்கே அதிமுக தனியாக நிற்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலில் அதிமுக மீண்டும் மெகா கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2019ல் அதிமுக உருவாக்கிய அதே கூட்டணி சிறிய மாற்றத்தோடு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவை சேர்ந்து விஐபி ஒருவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம்.

ஏற்கனவே அவர் செய்த பேச்சுவார்த்தையில்.. லோக்சபா தேர்தலில் எப்படியும் இங்கே பாஜக வெல்லாது. நீங்கள் நின்று வென்றாலும் எம்பி பதவி பயன் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்காது. அப்படி இருக்க அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்.

2024 லோக்சபா தேர்தலில் இருந்தே நாம் ஒன்றாக இருப்போம். 2026 சட்டசபை தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம். அப்போது அமைச்சர் பதவியும் தருகிறோம். கூட்டணி ஆட்சி அமைப்போம். 2026ல் நாம் ஒன்று சேர்வதற்கு பதில் இப்போதில் இருந்தே தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வோம்.

திமுகவிற்கு எதிராக அவர்களை போலவே வலுவான அணி அமைப்போம் என்று அந்த விஐபி எடப்பாடி பழனிசாமி சார்பாக சொல்லி இருக்கிறாராம்.

இறங்கி வருகிறது: இதை கேட்டு பாமக இறங்கி வர முடிவு செய்துள்ளதாம். அதிமுகவுடன் இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெறும் நிலையில் உள்ளதாம். இன்னொரு பக்கம்.. தேமுதிகவும் பாஜக பெரிய டீலிங் கொடுக்கவில்லை என்பதால் அதிமுகவிடம் இறங்கி வரும் எண்ணத்தில்தான் இருக்கிறதாம்.

உள்ளே வருகிறது: இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன.

அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டார்களாம்.

அண்ணாமலையும் பாஜக சார்பாக கூட்டணி வைக்க இறங்கி வரவில்லை என்பதால் இப்படி அதிமுக பக்கம் செல்ல இவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையும் நிலைக்கு வந்து இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+