எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து யார் யாருக்கு எத்தனை தொகுதி என்று அறிவிக்கப்பட்டன. அத்துடன் எந்தெந்த தொகுதியில் அதிமுக, பாஜக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் போட்டி என்பதையும் அறிவித்துவிட்டன. இதில் அதிமுக இந்த முறை 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 27 இடங்களில் நேரடியாகவும், 8 இடங்களிலும் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளையும் வைத்தும் போட்டியிடுகிறது. பாமக 18 இடங்களிலும், அமமுக 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் யார் சாமர்த்தியசாலி என்பதை பார்ப்போம்.
அரசியலில் சத்ரியனாக இருப்பதை விட சாமர்த்தியமாக செயல்படும் சாணக்கியர்களே வெற்றி பெறுகிறார்கள். 1990களில் இருந்து தற்போது வரை யார் சமார்த்தியமாக செயல்பட்டார்களோ அவர்களே வெற்றியும் பெற்றுள்ளார்கள். தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை திமுக அதிமுக ஆகிய கட்சிகளே பிரதான கட்சிகள்.. இவர்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். இதில் கூட்டணி பங்கீட்டை இரு கட்சிகளுமே முடித்துவிட்டன. தொகுதிகளை அறிவித்து வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகிவிட்டது.

அதிமுக கூட்டணி நிலவரம்
இதில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை 178 இடங்களில் போட்டியிட்ட அதிமுக இந்த முறை ஒரு தொகுதி கூடுதலாக 179 இடங்களில் போட்டியிடுகிறது. அதேபோல் கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இந்த முறை 27 தொகுதிகளில் நேரடியாகவும், கூட்டணி கட்சிகள் மூலமாக 8 இடங்களில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது. ஒட்டுமொத்தமாக பாஜக 35 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. பாமக கடந்த முறை 23 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 18 இடங்களில் தான் போட்டியிடுகிறது. அந்த தொகுதி பட்டியலும் வெளியாகிவிட்டது. இதில் திருநெல்வேலி ராதாபுரம் தவிர மற்ற எல்லாமே வடமாவட்டங்களில் பாமகவிற்கு வலுவான செல்வாக்கு உள்ள தொகுதிகள் ஆகும்.
எடப்பாடி பழனிசாமி சாமர்த்தியம்
அடுத்ததாக டிடிவி தினகரனின் அமமுக இந்த முறை 11 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த முறை கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டது. இந்த முறை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் பலத்துடன் போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை பெரிய கூட்டணியை வழிநடத்தினாலும், அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிடுவதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். இது தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட மிக அதிகம் ஆகும். அதேநேரம் அதிமுகவின் செல்வாக்கான தொகுதிகளை அவர் விட்டுக்கொடுக்கவில்லை... கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பல தொகுதிகள் திமுக நேரடியாக செல்வாக்கு உள்ள தொகுதிகள் ஆகும்.குறிப்பாக தமாக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் திமுகவை வீழ்த்துவது மிக கடினமான தொகுதிகள் ஆகும். பாமகவிற்கு குறைவான தொகுதிகளே கொடுத்துள்ளார்.
தினகரனை கொண்டுவந்தார்
எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களைச் சந்தித்து கூட்டணி பேசி முடிந்தவரை தொகுதிகளை குறைத்துவிட்டார். தேமுதிக போட்டியிட்ட தொகுதிகளைத்தான் அமமுகவிற்கு கொடுத்துள்ளார். அதேபோல் எதிரி என்று அறிவித்த டிடிவி தினகரனை தன் கூட்டணியில் இணைந்தார். பாமகவையும் இணைத்தார். இதன் மூலம் வாக்குகள் சிதறாமல் தடுத்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பாடம் கற்றுக்கொண்டார்.
அமித்ஷா சாமர்த்தியம் என்ன
2021-ல் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவை, இந்த முறை 27 தொகுதிகளுக்கு அமித்ஷா உயர்த்தியுள்ளார். இது மாநில அளவில் பாஜகவின் பேரம் பேசும் சக்தி அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்களை அதிமுக ஒதுக்கினாலும் அதில் தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார். இதன் மூலம் 35 இடங்களில் தாமலை போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதிமுகவாக கொடுக்கும் தொகுதியை வாங்கி வந்த பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறி உள்ளது. அதிமுகவுடன் சமமான முக்கியத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையை அமித்ஷா உருவாக்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா இருவருமே சாமார்த்தியமாகவே செயல்பட்டுள்ளார்கள் . தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி அன்றே யாருக்கு பலன் அதிகம் என்பது தெரியவரும்
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்














Click it and Unblock the Notifications