மோசமான நிலைமை.. உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க..எடப்பாடி பழனிசாமிக்கு போன மெசேஜ்.. புதுசா ஒரு "புயல்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மட்டும் புயல் அடிக்கவில்லை.. அதிமுகவிலும் புயல் அடித்துள்ளது.. இதுகுறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சென்னையை தாக்கிவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எமஎல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்..

Is Edappadi Palaniswami dissatisfied with AIADMK executives and Controversy in AIADMK over Chennai floods

திமுக அரசு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதே குற்றச்சாட்டைதான், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முன்வைத்திருந்தார்.. "முறையான முன்னெச்சரிக்கை திட்டமிடல் இல்லாததால்தான் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது" என்றார்.. அதுமட்டுமல்லாமல், பெருங்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார்.

ஆனால், ஒரே ஒருநாள் மட்டும் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு, அன்றைய தினமே ஃப்ளைட் பிடித்துக் கொண்டு, சேலத்துக்கே சென்றுவிட்டதாக குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் தரப்பு முன்வைத்து வருகிறது.

தலைவர்கள்: இதற்கு முன்பு சென்னையில் வெள்ளம் வந்தபோது, அனைத்துக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி என பாரபட்சம் பாராமல் மக்களை மீட்கும் பணியில் அக்கறை செலுத்திய நிலையில், ஒரே ஒரு நாள் மட்டுமே, வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி சென்று, நிவாரண பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கவிட்டு, அதற்கு பிறகு ஆளே காணவில்லைய? என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கியபோது சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி உத்தரவு: ஆனால், எடப்பாடியின் உத்தரவை யாருமே மதிக்கவில்லையாம். அதிமுகவினர் களத்தில் இல்லாததை கண்டு மாவட்ட செயலாளர்களிடம் கோபம் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்படி கோபம் காட்டியபோது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா ஆகிய இருவரும், "திமுக அரசு என்ன செய்துன்னு வேடிக்கை பார்ப்போம்.. நாம என்ன செய்தாலும் அதை சோசியல் மீடியாவில் நம்மை திமுக IT விங்க் நக்கலடிக்கத்தான் போகுது. அதனால, அமைதியா இருப்போம். முதலில் நீங்க சென்னைக்கு வாங்க. எங்க நிலைமையே ரொம்ப மோசமாயிருக்கு " என்றெல்லாம் மறுத்துப் பேசியிருக்கிறார்கள்.

புகார்கள்: இதற்கிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலர், தங்கள் பகுதியின் வட்டச்செயலாளர்களை வைத்து சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து அதனை ஃபோட்டோ எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாட்ஸ் அப் பண்ணிட்டு அமைதியாகி விட்டார்களாம்.. அதுமட்டுமல்ல, களப்பணியில் சென்னை அதிமுகவினர் சரிவர செயல்படவில்லை என எடப்பாடிக்கு புகார்கள் போய்க்கொண்டிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+