"அவங்கதான் குறியே".. செந்தில் பாலாஜியிடம் திருப்பி திருப்பி கேட்ட அமலாக்கத்துறை! அதிரும் திமுக.. ஏன்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை போக்குவரத்து துறை வழக்கு பற்றி கேட்பதை விட வேறு ஒரு விஷயம் பற்றித்தான் அதிகம் கேள்வி கேட்பதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக கடந்த 3 நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வருகிறார். காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை சொன்னதை விட கூடுதல் நேரம் செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது காலை 3 மணி நேரம், பிற்பகல் 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் என்று கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேல் செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்பட்டு இருக்கிறார்.
விசாரணை பின்னணி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கைதான அவரிடம்.. அது தொடர்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறதாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படுவது தொடர்பாகவே அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறதாம்.
90 சதவிகிதம்: ஆனால் 50 சதவிகிதம் மட்டுமே இதில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறதாம். மற்ற 50 சதவிகிதம் பெரும்பாலும் தற்போதைய திமுக ஆட்சி, தற்போதைய ஆட்சியில் அவர் வாங்கிய சொத்துக்கள், அவர் செய்த தேர்தல் செலவுகள் பற்றித்தான் விசாரணை நடத்தப்படுகிறதாம்.
1. இப்போது ஆட்சியில் நீங்கள் வாங்கிய சொத்துக்கள் எப்படி வந்தன.
2 கடந்த தேர்தலுக்கு செலவு செய்த தொகைகள் எங்கே இருந்து வந்தன.
3. இந்த ஆட்சியில் உங்கள் டெண்டர் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனராம்.
திமுக மேலிடத்தை குறி வைக்கும் விதமாக இந்த கேள்விகளை அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறதாம். ஆனால் இதற்கு செந்தில் பாலாஜி பெரிதாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறதாம். தினமும் 50 கேள்விகள் குறைந்தபட்சம் கேட்கப்படும். இதில் செந்தில் பாலாஜி சரியாக பதில் அளிக்காத நிலையில் அவரின் கஸ்டடியை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications