Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரவீன் சக்ரவர்த்தியை இயக்கிய.. அந்த 3வது சக்தி! திமுக உறவை துண்டிக்க டெல்லி மேலிடம் ஆர்டர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரவீன் காங்கிரசுக்கு வந்தே 7-8 வருடங்கள்தான் ஆகிறது. அவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பெயர் கூட தெரியாது. அவர் ஒரு வெத்து வேட்டு. வெற்றிகரமான ஒரு கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இப்படி அவர் செய்கிறார், என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமணி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி சமீபத்தில் தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

congress

கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மீது காங்கிரஸ் ஆக்சன் எடுக்கவில்லை. காங்கிரசின் இந்த செயல் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளதாம். குறைந்தபட்சம் அவருக்கு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம்.

பிரவீன் எல்லை மீறுகிறார்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.

இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். இவரை ராகுல் காந்தி கட்டுப்படுத்த தவறியது.. தொடர்ந்து இவருக்கு கடிவாளம் போடாமல் இருப்பது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் மீது ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ரமணி பேட்டி

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமணி அளித்துள்ள பேட்டியில், பிரவீன் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால் நீங்கள் கட்சிக்குள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் கட்சிக்கு வெளியே பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பிரவீன் இப்படி பேசுவதற்கு முன் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். அதிக இடம் வேண்டும்.. இப்படி ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால் இவர் கோரிக்கை வைக்கவில்லை. எதிர்க்கிறார்.

கூட்டணியில் இருந்து கொண்டே அவர் எதிர்ப்பது தவறு. பிரவீன் காங்கிரசுக்கு வந்தே 7-8 வருடங்கள்தான் ஆகிறது. அவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பெயர் கூட தெரியாது. அவர் ஒரு வெத்து வேட்டு. வெற்றிகரமான ஒரு கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இப்படி அவர் செய்கிறார். கூட்டணி தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் இப்படி செய்கிறார்.

காங்கிரஸ் மேலிடம் சொல்லி ஒன்று அவர் இப்படி செய்திருக்கலாம். கூட்டணியை முறிக்க வேண்டும் என்று மேலிடம் இப்படி செய்திருக்கலாம். இரண்டாவதாக நீங்கள் உங்கள் சொந்த காரணத்திற்காக.. உள் காரணத்திற்காக இப்படி செய்திருக்கலாம். கூட்டணியை உடைக்க எதோ ஒரு சக்தி விரும்பலாம். அதாவது விஜய் நினைக்கலாம். பாஜக நினைக்கலாம். இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதால் இவர்களை உடைக்க நினைக்கலாம்.

மூன்றாவது, இவருக்கு மயிலாடுதுறை தொகுதி கிடைக்கவில்லை. கட்சியில் ஓரம் கட்டுகிறார்கள்.. விஜய் உடன் சேரலாம் என்பதால் இவர் இப்படி பிரச்சனைகளை எழுப்பலாம், என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+