Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊசிக்கும் ஏசிக்கும் ஒரே வரியா? இட்லியும் ஜிலேபியும் ஒன்றா? நாராயணன் ஆவேசம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி வரியின் அடிப்படையே புரியாமல் பேசி இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் வந்திருந்த மத்திய நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் முன்வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவு நேற்றிலிருந்து டிரெண்ட்ங்கில் இருந்து வருகிறது. அவர் பேசும்போது இனிப்புக்கு 5% வரி போட்டுள்ளார்கள். உணவுக்கு 5% போட்டுள்ளார்கள். ஆனால் காரத்திற்கு மட்டும் 12% ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள். பிரட், பண்ணுக்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது. மற்றவை அனைத்திற்கு 28% வரி.

nirmala sitharaman annapurna gst tax

அதே பண்ணுக்குள் க்ரீம் வைத்தால் 18% வரி போட வேண்டி உள்ளது. வருகின்ற வாடிக்கையாளர்கள் பன்னையும் க்ரீமையும் தனித்தனியாகக் கொடு. நாங்களே வைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். இதனால் எங்களால் கடை நடத்த முடியவில்லை. பில் போட கம்பியூட்டரே திணறுகிறது என்று எல்லாம் பேசிய விசயம் இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதன் பின்னால் அவரை மறைமுகமாக அரசு மிரட்டுகிறது. அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று சொல்லி தனி வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஜிஎஸ்டி பிரச்சினை இப்போது உணவக உரிமையாளர் மற்றும் பாஜகவின் தனிப்பட்ட பிரச்சினையாக மாற்றப்பட்டு வருகிறது. கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்பது தொடர்பான வீடியோவை பகிர்ந்து மிக நீண்ட விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்போல திமுக எம்பி கனிமொழி, அவரது எக்ஸ் தள பதிவில், "ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டாமல் இருக்க வேண்டும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நாராயண திருப்பதி மிக விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நானும் அந்த வீடியோவை பார்த்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு நிறுவனம் உள்ளது. அதில் நாங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். அதற்கு அரசு 5% ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மெத்தைக்கு 12% வரி. அதே இருக்கை மற்றும் மின்விசிறி வாங்கினால் 18% வரி. ஏசி வாங்கினால் 28% வரி. என் கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஏன் தனித் தனி வரி போட்டு இருக்கிறீர்கள்? ஒரே வரியாகப் போட்டு கொடுங்கள் கேட்டால் நான் கொடுக்க முடியுமா? ஒரே நாடு ஒரே வரி என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால் அது இந்தியா முழுமைக்கும் ஒரே வரிக்குள் வரவேண்டும். இதுதான் கான்செஃப்ட். அவர் சொல்கிறார் இனிப்பு, காரம் என சகலத்திற்கும் ஒரே வரியாகப் போட்டுவிடுங்கள் என்கிறார். இது எப்படி சரியாகும்?

நான் அவரது அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன். சாதாரணமான இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் இட்லிக்கு ஒரு விலை வைத்திருக்கிறார். அதே இட்லியை ஏசி அறையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு விலை வைத்திருக்கிறார். இது ஏன்? அங்கே மின்சார செலவு கூடுதலாக வருகிறது. ஆகவே அங்கே இட்லி விலை அதிகமாகிறது. அதைப்போலத்தான் பண்ணும் பிரட்டும் ஏழை எளிய மக்கள் சப்பிடக்கூடியது.

nirmala sitharaman annapurna gst tax

ஆகவே அதற்கு ஜிஎஸ்டி இல்லை. அதே பண்ணில் ஒருவர் ஜாம் அல்லது க்ரீம் வைத்துச் சாப்பிட்டால் அவர் ஏழை கணக்கில் வரமாட்டார். அவர் வசதியாக உள்ளதால்தான் கூடுதலாக க்ரீம், பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார். அதனால் வரி கூடுதல். இதைக் கூட அந்த முதலாளிக்குப் புரியாதா? அதற்குப் பெயர்தான் இன்புட் வரி. எந்த ஏழை பண்ணில் பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார் சொல்லுங்கள்?

இதே அன்னப்பூர்ணா கோவை ஆர்.எஸ் புறத்தில் பார் நடத்துகிறது. அங்கே சாதாரண அன்னபூர்ணாவில் விற்கப்படும் உணவின் விலையா இருக்கிறது? அங்கே ஏன் விலையைக் கூடுதலாக விற்கிறார்? இரண்டும் ஒரே நிறுவனம் தான். விலையை ஒரே மாதிரி போடுங்கள் என்று கேட்க முடியுமா? ஒரு பொருளை வைத்துத்தான் வரி போட முடியும். எல்லா பொருளுக்கும் ஒரே வரியைப் போட முடியாது.

அன்னபூர்ணா முதலாளி அடிப்படைப் புரிதல் இல்லாமல் பேசி இருக்கிறார். உதாரணமாகச் சொல்கிறேன். பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் பொருளுக்கு 18% வரி போட்டார்கள். உடனே இதற்குப் போய் வரி போடலாமா என்று கேட்டார்கள். இந்தியாவில் 93% பெண்கள் நம் நாட்டில் தயாராகும் நாப்கினைத்தான் பயன்படுத்திவருகிறார்கள். அதற்கு வரி இல்லை. மருந்துக் கடைகளில் விற்பனையாகும் பிராண்ட் நாப்கின் பொருள் மட்டுமே அரசு ஜிஎஸ்டி போட்டுள்ளது.

இதற்கு மட்டும் ஏன் ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்றால் இந்த வகையான நாப்கின்களில் பாலிபுரோப்பிலின் என்ற பொருள் உள்ளது. அது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே அதற்கு இன்புட் ஜிஎஸ்டி 18% போட்டுள்ளார்கள். அப்படிப் போடவில்லை என்றால் அதன் விலை இன்னும் அதிகமாகிவிடும். ஒருவர் இறக்குமதி செய்வதால் வரியை அரசு விதிக்கிறது. அந்த வரியை அவர் விற்பனை மூலம் சரி கட்டி விடுகிறார். இதுதான் இன்புட் வரி, அவுட் புட் வரிக்கான லாஜிக்.

nirmala sitharaman annapurna gst tax

இன்னும் விளக்கும்படி சொல்கிறேன். ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பல பொருட்கள் விற்கப்படும். அங்கே சாதாரண பென்சில் வாங்கலாம். குண்டூசி வாங்கலாம். அதே கடையில் ஆடம்பரமான ஏசி, ஃபிரிட்ஜ் வாங்கலாம். ஒரே கடைதான். ஒரே பில்தான் போடுகிறோம். எனவே எல்லா பொருளுக்கு 25% வரி வைத்துவிடுங்கள் என்றால் ஏசி வாங்குகின்றவர் 25% வரி கட்டமுடியும். பென்சில் வாங்குகின்றவர் எதற்கு 25% வரி கட்டவேண்டும்.

அதைப்போலத்தான் பன் என்பது ஏழைகளின் உணவு. டீ என்பது ஏழைகள் உணவு. அதே ஒரு விலை உயர்ந்த குளிர்பானம் குடிக்கிறார். இரண்டு அன்னபூர்ணாவில் விற்கப்படுகிறது. இரண்டிற்கும் ஒரே பில் போட முடியுமா? இங்கே விற்பனை செய்யப்படும் பொருளை வைத்துத்தான் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மனிதர்களைப் பார்த்து வரி போடுவதில்லை. ஆடம்பரமான உணவைச் சாப்பிடுகிறவர் ஒரு வரியைக் கட்ட வேண்டும். அடிப்படை பசிக்காக உண்பவர் வரியைக் குறைத்துக் கட்ட வேண்டும். இதான் அடிப்படை. அப்படித்தான் வரி போட முடியும்.

அன்னபூர்ணா முதலாளி என்ன சொல்கிறார்? ஐஸ் க்ரீமுக்கும் டீக்கும் ஒரே வரி போடச் சொல்கிறார். இனிப்புக்கும் காரத்திற்கும் ஒரே வரி போட முடியாது. அது சமையலைப் பொறுத்தது அல்ல. சமையல் செய்யும் மாஸ்டரைப் பொறுத்ததும் அல்ல. அது உணவுப் பண்டத்தில் சேர்க்கப்படும் பொருள்களைப் பொறுத்தது. அதற்கு ஏற்ப வரி மாறவே செய்யும்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+