தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால்.. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. ஆ! அண்ணாமலை கணக்கு இடிக்குதே
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுவரை யார் குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை பேச்சு: தமிழ்நாட்டில் எல்லோரின் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வோம். அதாவது இதுவரை யார் குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
காமராஜர் ஆட்சியில் பல அணைகள் கட்டப்பட்டன, அதன் பிறகு வந்த முதலமைச்சர்கள் யாரும் அவரைப் போல் செயல்படவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக கல்குவாரிகளில் கோடிக்கணக்கில் திமுகவினர் சம்பாதித்து உள்ளனர், என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
விவாதம் - சாத்தியமா?: பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் இதை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். அதில்,
சீமானுக்கு கடும் போட்டியாக அண்ணாமலை பேசி உள்ளார் . நாம் இதை கணக்கு செய்து பார்ப்போம். தமிழகத்தில் தற்போது சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதாவது சுமார் 80 லட்சம் மக்கள் தொகை (குடும்ப அளவு 4). இதனால் சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை மிச்சமாகும். அதாவது சுமார் 1.7 கோடி குடும்பங்கள்.
அதாவது 1.7 குடும்பங்களில் அரசு ஊழியர்கள் இப்போது இல்லை. அவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பத்தில் கடந்த காலத்தில் ஒரு அரசு ஊழியர் இருந்ததாக வாதங்களுக்காக வைத்துக் கொள்வோம்.
அவர்கள் எல்லாம் இதற்கு முன் அரசு வேலை பார்த்து இருக்க சாத்தியமில்லை, ஆனால் இதை வாதத்திற்காக வைத்துக்கொள்வோம். அதாவது இன்னும் 80 லட்சம் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தற்போது 20 லட்சம் அரசு ஊழியர்களில் இருந்து மேலும் 80 லட்சம் அரசு ஊழியர்களை அரசு சேர்க்குமா?
எப்படி சேர்க்க முடியும்? யாரை எங்கே சேர்க்க முடியும்? இது எப்படி சாத்தியம், மாநிலத்திற்கான ஊதிய மசோதா என்ன, பணம் எங்கிருந்து வரும்?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலை பேச்சு: முன்னதாக அண்ணாமலை தனது பேச்சில், திமுக ஆட்சியில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகின்றனர். ஆனால் 8.5 லட்சம் கோடி ரூபாயை மக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. ஊழல் இல்லாத அரசாக மத்தியில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்தது. பாஜகவின் 76 அமைச்சர்களும் நேர்மையானவர்கள்.
அயோத்தியில் ராமர் கோவிலை யாரையும் மிரட்டி கட்டவில்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து கட்டிய கோவில் தான் ராமர் கோயில், என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்












Click it and Unblock the Notifications