நச்சு வாயு + கொடூர ஆயில்.. அடுத்த சில நாட்களுக்கு கடல் மீன் வாங்குவது பாதுகாப்பா? இதை நோட் பண்ணுங்க
சென்னை: வடசென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் மாசுபாடுகள் காரணமாக அங்கே மீன்கள் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீன்கள் வாங்குவது அடுத்த சில நாட்களுக்கு ஆபத்தானதாக பார்க்கப்படலாம்.
சென்னையில் மழை வெள்ளத்திற்கு இடையே மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் உடன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்பட்டது. இதில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிபிசிஎல் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியாகியிருக்கிறது. இது வெள்ளத்தில் வந்து அங்கே இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் மீன்களும் எண்ணெய் காரணமாக செத்து மிதந்து உள்ளன.
கடைசியில் பக்கிங்காம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
மக்கள் அதிர்ச்சி: இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் உடல்நிலை, ஆரோக்கியத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அங்கே மீன்கள் வளம், கடல் வளத்தையும் பாதித்து உள்ளது. அங்கே கடலில் கலந்த எண்ணெய் பெருமளவில் நீக்கப்பட்டாலும்.. இதை மொத்தமாக நீக்குவது என்பது நடக்கவே முடியாத காரியம் என்கிறார்கள் கடலியல் வல்லுனர்கள்.

வாயு கசிவு: இது போல இன்று சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.
அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அம்மோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மீன் வளம்: இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக அங்கே கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. இரண்டு சம்பவங்களிலும் அங்கே மீன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மீன்கள் நூற்றுக்கணக்கில் செத்து மிதக்க தொடங்கி உள்ளன. பல இடங்களில் மீன்கள் கொத்து கொத்தாக மிதக்க தொடங்கி உள்ளன.
வடசென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் மாசுபாடுகள் காரணமாக அங்கே மீன்கள் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீன்கள் வாங்குவது அடுத்த சில நாட்களுக்கு ஆபத்தானதாக பார்க்கப்படலாம். முக்கியமாக மீன்கள் மாசு பாடு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் மீன்களை அடுத்த சில நாட்கள் இந்த பகுதிகளில் இருந்து வாங்கி உட்கொள்வது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications