சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லீடர்ஷிப்.. என்ன தேர்தல் முடிந்த கையோடு கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்றாரு? "அவர்" மீது அட்டாக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்திருக்கும் ஒரு ட்விட் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை பிடிக்க.. அங்கு வலுவாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியல.. அதனால்தான் பஞ்சாப்பில் தோற்றுவிட்டோம்.. காங்கிரஸ் விளக்கம் எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியல.. அதனால்தான் பஞ்சாப்பில் தோற்றுவிட்டோம்.. காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைமை

காங்கிரஸ் தலைமை

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 7 எம்எல்ஏக்கள் பலத்தில் இருந்து 2 எம்எல்ஏக்கள் என்ற பலத்திற்கு சுருங்கிவிட்டது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு இருந்தார். பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 பிரியங்கா

பிரியங்கா

பிரியங்கா காந்தி காங்கிரசில் மாற்று தலைவராக வருவார் என்று கருதிய கட்சி தலைவர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்து இருக்கும். இன்னொரு பக்கம் பஞ்சாப்பிலும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அங்கு அமரீந்தர் சிங் வெளியேறியது, சித்துவை கட்சி தலைவராக்கியது, சன்னியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது என்று பல தவறான முடிவுகளை அக்கட்சி எடுத்தது. இது எல்லாம் காங்கிரசுக்கு எதிராக திரும்ப அக்கட்சி வெறும் 18 இடங்களில் மட்டும் வென்றது. ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

உத்தரகாண்டிலும் இதே நிலைதான். அங்கு மூன்று முறை பாஜக முதல்வரை மாற்றியும், அங்கு ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியும் அதை வாக்குகளாக மாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. இதனால் காங்கிரஸ் கூட்டணி வெறும் 19 இடங்களை மட்டுமே அங்கு வென்றது. பாஜக இங்கு 47 இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளது. கோவாவில் கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 12 இடங்களில் வென்று 20 இடங்களை வென்ற பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த தோல்வி காங்கிரஸ் காரணமாக கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஒரு வித்தியாசமான ட்விட்டை போட்டுள்ளார். லீடர்ஷிப் குறித்த புத்தக அட்டையை அவர் பதிவிட்டுள்ளார். தலைமைத்துவம் குறித்து விளக்க கூடிய புத்தகம் ஆகும் இது. out of boxல் யோசிப்பது எப்படி, தலைமை வகிப்பது எப்படி என்பதை விளக்கும் புத்தகம் ஆகும் இது. இதைத்தான் பதிவிட்டு எனக்கு இந்த புத்தகம் பரிந்துரைக்கப்பட்டது என்று கார்த்தி கூறியுள்ளார்.

அவர் மீது தாக்கு

அவர் மீது தாக்கு

கார்த்தி சிதம்பரம் இதனால் தேசிய காங்கிரஸ் தலைமை மீது மறைமுகமாக விமர்சனம் வைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை சரியில்லை.. தேசிய தலைமைக்கு தலைமைத்துவம் இல்லை என்பதை மறைமுகமாக இவர் விமர்சனம் செய்கிறாரோ என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. நேற்று தேர்தல் முடிவுகள் வந்த போது அதனால் விரக்தி அடைந்து, நெட்பிளிக்சில் பார்க்க நல்ல தொடர் இருந்தால் பரிந்துரையுங்கள் என்று இவர் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Is Karti Chidambaram indirectly taking a dig at Congress National leadership after the 5 state election result?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X