சென்னையில் ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா? அதிகாரப்பூர்வ விளக்கம்
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு மெட்ரோ பணிகள் காரணம் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பல்வேறு தனியார் கேளிக்கை பூங்காக்கள் இயங்கி வருகிறது. இதற்கிடையே அங்கே செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள பிரபல பப் ஒன்றில் எதிர்பாராத விதமாகக் கட்டிட விபத்து ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்து விபத்து: இந்த விபத்து மாலை 6.45- 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று பேர் பலி: அதாவது இந்த விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.. மற்ற இருவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த மூன்று பேரும் அங்கே பணியாற்றி வந்த ஊழியர்கள் ஆவர். உயிரிழந்தோர் தமிழகத்தைச் சேர்ந்த 45 வயதான சைக்ளோன்ராஜ், மணிப்பூரைச் சேர்ந்த இவுரவ் மேக்ஸ் (24). லாலி (22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,, இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சுமார் 40 பேரைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த போது உள்ளே 20 முதல் 22 அதிகாரிகளும் ஓரிரு கஸ்டமர்களும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், மேற்கூரையின் ஒரு பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததால் மட்டுமே பாதிப்பு இந்தளவுக்கு இருந்துள்ளது. மேற்கூரை முழுமையாக இடிந்து விழுந்து இருந்தால் சேதம் மிக மோசமாக இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள அபிராமிபுரம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மெட்ரோ பணிகள் காரணமா: இந்த பப் உள்ள இடத்திற்கு மிக அருகே தான் சுரங்க மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. விடுதி அருகே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடக்கும் நிலையில், அந்த கோணத்தில் விசாரணை நடந்தது. இருப்பினும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகளால் விபத்து நடந்ததா என்பதை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விபத்து நடந்த பப்பிற்கு மெட்ரோ அதிகாரிகளும் விரைந்துள்ளனர். மெட்ரோ பணிகளால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை மெட்ரோ நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் எக்ஸ் பக்கத்தில், "ஆழ்வார்பேட்டை செக்மெட் பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டது இல்லை என்பதை CMRL தெளிவுபடுத்த விரும்புகிறது,.
ஏனெனில் விபத்து நடந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் தான் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கட்டிடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சிஎம்ஆர்எல் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்குச் சென்னை மெட்ரோ அதிகாரிகள் உதவுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications