சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பிரதமர் ஸ்டாலின்?".. எகிறி அடிக்கும் திமுக.. பஞ்ச் டயலாக்குகள் ரெடி..அப்டியே கலங்கி விழிக்கும் பாஜக

பஞ்ச் டயலாக்குகளுடன் ஓராண்டு நிறைவை கொண்டாட தயாராகி வருகிறது திமுக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: 10 வருடம் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதுடன், ஒரு வருடத்தையும் நிறைவு செய்ய உள்ளது திமுக அரசு.. இதையடுத்து முக்கிய விஷயம் ஒன்று அரசியல் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.

இந்த ஒரு வருடம் ஆட்சி நிறைவில் ஏகப்பட்ட பிரச்சனைகளை திமுக சமாளித்துள்ளது. முக்கியமாக, தொடர்ந்து பிரதான இடத்தையும் பெற்று வருவது, தமிழகத்தின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் முன்னேற்றத்தை தேசிய அரசியலில் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்தார்..

நீட் தேர்வை விலக்கும் வரை திமுக ஓயாது! உதயநிதி ஸ்டாலின் மிகத் திட்டவட்டம்! மாணவர்கள் உற்சாகம்! நீட் தேர்வை விலக்கும் வரை திமுக ஓயாது! உதயநிதி ஸ்டாலின் மிகத் திட்டவட்டம்! மாணவர்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இதற்கு காரணம், பொறுப்பேற்ற 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் இப்படி அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு முதல்வருக்கு பெருகியிருந்ததுதான்.. எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டதை இந்த நாடே உற்று கவனித்தது..

ஸ்டாலின் மூவ்

ஸ்டாலின் மூவ்

அதேபோல, மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளும் கவனத்தை பெற்றுள்ளன.. சுருக்கமாக சொன்னால், சொந்த மாநிலத்தில் காட்டிவரும் அக்கறை ஒருபக்கம், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சி மறுபக்கம் என இரண்டு வழிகளில் முதல்வர் தன் நாட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டுவதில் தீவிரத்தை கையில் எடுத்துள்ளார்..

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

அதனால்தான் ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் கவனம் ஸ்டாலின் மீது குவிகிறது.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே, மம்தா, ராகுல் தரப்பில் பிரதமர் வேட்பாளர் விவகாரம் எழுந்து வரும் நிலையில், ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு தகுதியானவர்தான் என்பதை திமுகவினரே வலிய சொல்லி வருகிறார்கள்.. பெட்ரோல் டீசல் விலை குறித்து, பிரதமர் மோடியை திமுக அரசு காட்டமாக கேள்வி எழுப்பியதாக இருக்கட்டும், அல்லது நீட் விவகாரத்தில் ஆளுநர் ரவி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இருக்கட்டும், பாஜக மேலிடம் சற்று அதிர்ந்துதான் போயுள்ளது..

ஸ்டாலினின் ரோல்

ஸ்டாலினின் ரோல்

இதெல்லாம் கணக்கில் வைத்துதான், தேசிய அரசியலில் ஸ்டாலினின் ரோல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு முக்கியமான விஷயம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. திமுக ஆட்சி பொறுப்பேற்று மே 7-ந்தேதியோடு ஒரு வருடம் நிறைவு பெறவிருக்கிறது. ஓராண்டு ஆட்சியை விமர்சையாக கொண்டாடவும், ஓராண்டில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த சாதனைகளை விளம்பரப்படுத்தவும் திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.

தேசிய அரசியல்

தேசிய அரசியல்

சாதனை விளம்பரங்கள் பஞ்ச் டயலாக் வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக டயலாக்குகளை ரெடி செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். அதாவது, அதிமுக ஆட்சியின் போது, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று விளம்பரப்படுத்தினார்கள் அல்லவா. அதேபோல பஞ்ச் டயலாக்குகள் தயாராகின்றன. இதற்கிடையே, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் புரட்சிக்கர திட்டங்கள், சாதனைகள் அனைத்தும் வெளிமாநிலங்களிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதால், அந்தந்த மாநில மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாம் திமுக அரசு.

Recommended Video

    Red Shirt-ல் MK Stalin! முதல்வரின் May Day Speech | OneIndia Tamil
    அமித்ஷா

    அமித்ஷா

    தேசிய அளவில் ஸ்டாலின் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் என்பதை நிலை நிறுத்தவும் உயர்த்திப் பிடிக்கவுமே இந்த விளம்பர ஏற்பாடுகள் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்... வரும் எம்பி தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் 5 இடங்களை பெற்றாக வேண்டும் என்று தமிழக பாஜகவுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ள நிலையில், திமுகதான் நமக்கு முதல் குறி என்று அமித்ஷா அறிவுறுத்தியிருந்த நிலையில், ஸ்டாலினின் அதிரடி பட்டைய கிளப்ப தொடங்கிவிட்டது போல.. இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!

    English summary
    Is MK Stalin becoming the inevitable leader nationally and whats the dmk plan பஞ்ச் டயலாக்குகளுடன் ஓராண்டு நிறைவை கொண்டாட தயாராகி வருகிறது திமுக அரசு
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X