காலில் விழு! கண்ணை காட்டி சிக்னல் தந்த அமர் பிரசாத்! அண்ணாமலை வீடியோ "ஸ்கிரிப்ட்" ஆ? பாயும் விக்ரமன்
சென்னை: அண்ணாமலையின் காலில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. நாடு முழுக்க 7,78,725 கடந்த முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். அதேபோல் எஸ்சி பிரிவில் தமிழ்நாடு மாணவர் பிரதாப் இந்திய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். அவர் 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு
இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக விலக்கு கிடைக்கவே கிடைக்காது என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறினார். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் 104 மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவர் அண்ணாமலையிடம் உதவி கேட்டு நேற்று வந்தார். மருத்துவ படிப்பு செலவிற்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டு அவர் அண்ணாமலையை சந்தித்தார். அவரை அண்ணாமலை வாழ்த்தினார்.

மாணவி உதவி
அதோடு மாணவியின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அண்ணாமலை அந்த மாணவியிடம் செய்தியாளர் சந்திப்பில் உறுதி அளித்தார். இதனால் அந்த மாணவியும் மகிழ்ச்சி அடைந்தார். அதோடு மாணவி கண்ணீர் கண்ணீர்விட்டு அண்ணாமலைக்கு மேடையிலேயே நன்றியும் சொன்னார். அதோடு அண்ணாமலை காலில் அந்த மாணவி விழுந்தார். உடனே அந்த மாணவியை தூக்கிவிட்டு அண்ணாமலை.. நீங்க படிச்சு இருக்கீங்க.. நீங்க சாதிச்சு இருக்கீங்க.. நீங்க எல்லாம் காலில் விழ கூடாது என்று என்று அறிவுரை வழங்கினார்.

அமர் பிரசாத் ரெட்டி
ஆனால் இந்த வீடியோதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அந்த மாணவியை காலில் விழ சொல்லி பாஜகவை சேர்ந்த இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டிதான் சிக்னல் கொடுத்தார். அவர்தான் கண்ணை அசைத்து சிக்னல் கொடுத்தார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இவர் சிக்னல் கொடுத்த பின்பே அந்த மாணவி காலில் விழுந்தார் என்று புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரமன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் இது தொடர்பாக விமர்சனம் வைத்துள்ளார். அதில், அந்த குழந்தையை திரு.அண்ணாமலை காலில் விழச் சொல்லி நிர்பந்திப்பது ஏன்? கனவுகளுடன் வரும் எளிய குடும்பத்து பெண் பிள்ளைகளை இப்படி காலில் விழ வைத்து அவமானப்படுத்தி நீங்கள் நல்ல பெயரெடுப்பதெல்லாம் கேவலமான அரசியல், என்று விமர்சனம் செய்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications